

கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்
புதுடெல்லி: மதுபான நிறுவனத்துக்கு உதவ லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா பரிசீலித்தார். மனுவை வேறு நீதிபதியின் விசாரணைக்கு அனுப்புவதாகக் கூறி விசாரணையிலிருந்து அவர் விலகினார்.