செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது இரும்பு நடைபாதை படிக்கட்டு சரிந்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி உயிரிழப்பு

செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது இரும்பு நடைபாதை படிக்கட்டு சரிந்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: இரும்பு நடை​பாதை படிக்​கட்டு சரிந்து விழுந்த விபத்​தில் ஜார்க்​கண்ட் மாநில தொழிலாளி உயி​ரிழந்​துள்​ளார். சென்னை மணப்​பாக்​கத்​தில் உள்ள பிரபல​மான கட்​டு​மான நிறு​வனத்​தில் வட மாநிலத்​தைச் சேர்ந்த ஏராள​மானோர் வேலை செய்து வரு​கின்​றனர்.

இவர்​களில் 50-க்​கும் மேற்​பட்​டோர் ராமாபுரம் சாந்தி நகர் பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தகர இரும்பு செட்அறை​யில் தங்​கி​யுள்​ளனர்.

இவர்​களில் 40-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று முன்​தினம் இரவு முதல்​மாடி இரும்பு படிக்​கட்​டில் சாய்ந்​த​படி ஒரே நேரத்​தில் தங்​களது செல்​போனில் ஐபிஎல் கிரிக்கெட் இறு​திப் போட்​டியை நேரலை​யில் ரசித்​துக் கொண்​டிருந்​தனர்.

15 அடி உயரம்

அப்​போது எதிர்​பா​ராத வித​மாக இரும்பு பக்​க​வாட்டு கம்பி உடைந்​தது. இதில், அனை​வரும் 15 அடி உயரத்​திலிருந்து கீழே விழுந்​தனர். ஒரு​வர் மீது மற்​றொரு​வர் விழுந்​த​தால் பலருக்கு தலை, கை, கால் என உடல் முழு​வதும் காயம் ஏற்​பட்​டது.

தகவல் அறிந்து நந்​தம்​பாக்​கம் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த அனை​வரை​யும் மீட்டு கிண்டி மற்​றும் போரூரில் உள்ள மருத்​து​வ​மனை​களில் சேர்த்​தனர்.

இவர்​களில் ஜார்க்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த பிரிஞ்சி மாஞ்சி (31) என்ற தொழிலாளி மட்​டும் மேல் சிகிச்​சைக்​காக சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதி​காலை உயி​ரிழந்​தார். இந்த விவ​காரம் தொடர்​பாக நந்​தம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது இரும்பு நடைபாதை படிக்கட்டு சரிந்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி உயிரிழப்பு
குரூப் 2, 2ஏ தேர்வில் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in