உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.20 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

சென்னை பல்​லா​வரத்​தில் தேர்​தல் கண்​காணிப்புக் குழு நடவடிக்கை
உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.20 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்
Updated on
1 min read

பல்​லா​வரம்: சென்னை பல்​லா​வரம் அடுத்த அனகாபுத்​தூரில் உரிய ஆவணங்​கள் இல்​லாமல் காரில் எடுத்​துச் செல்​லப்​பட்ட ரூ.19.63 கோடி மதிப்​பிலான தங்​கம், வெள்ளி நகைகளை தேர்​தல் நிலைக் கண்​காணிப்பு குழு​வினர் பறி​முதல் செய்​தனர்.

சென்னை பல்​லா​வரம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அனகாபுத்​தூர் பகு​தி​யில் தேர்​தல் நிலை கண்​காணிப்பு குழு​வினர் நேற்று காலை வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, ஒரு வாக​னத்தை நிறுத்தி சோதனை செய்​த​போது, 24 பெட்​டிகளில் மொத்​தம் 13 கிலோ தங்க நகைகள், 34 கிலோ வெள்ளி நகைகள் என மொத்​தம் ரூ.19.63 கோடி மதிப்​பிலான நகைகளை பிரபல நகைக்​கடைக்கு எடுத்​துச் செல்​வது தெரிய​வந்​தது.

ஆனால், உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால் நகைகளை அதி​காரி​கள் பறி​முதல் செய்​து, வரு​மான வரித்துறை​யினரிடம் ஒப்​படைத்​தனர். பல்​லா​வரம் அடுத்த திருநீர்​மலை பகு​தி​யில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் நிலை கண்​காணிப்பு குழு​வினர் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த திரு​வள்ளூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த ஆனந்த சிவசங்​கர் என்​பவர் உரிய ஆவணங்​கள் இல்​லாமல் எடுத்​துச் சென்ற ரூ.1.08 லட்​சம் பணத்தை கைப்​பற்றி அரசுக் கரு​வூலத்​தில் ஒப்​படைத்​தனர்.

தாம்​பரம் தொகு​திக்கு உட்​பட்ட கோவி​லாஞ்​சேரி பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படை குழு​வினர் நேற்று முன்​தினம் இரவு ஒரு லாரியை மடக்கி சோதனை செய்​தனர். லாரியில் இருந்த மது​ராந்​தகம் பகு​தி​யைச் சேர்ந்த பூமணி (30) என்​பவர் உரிய ஆவணங்​கள் இல்​லாமல் வைத்​திருந்த ரூ.1 லட்​சத்தை கைப்​பற்​றி, தாம்​பரத்​தில் உள்ள அரசுக் கரு​வூலத்​தில் ஒப்​படைத்​தனர்.

தமாகா சென்னை மாவட்ட செயலாளராக இருப்பவர் பிஜூ சாக்கோ (57). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். பெரம்பூரில் வசிக்கிறார். இவர் நேற்று முன் தினம் காலை நண்பர் வினோத் (40) என்பவருடன் காரில் சென்றார். ஓட்டேரி பகுதியில் சென்ற போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீஸார் இணைந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரில் ரூ.1.19 லட்சம் பணம் இருந்தது. அது ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான பணம் என்று பிஜு தெரிவித்துள்ளார். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.20 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்
8,931 நாட்கள்: புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in