அமைச்சர் ஷாஜகானின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

ஜவாஹிருல்லா | கோப்புப் படம்
ஜவாஹிருல்லா | கோப்புப் படம்
Updated on
1 min read

நாகப்பட்டினம்: ​தி​முக தயவால் வெற்றி பெற்​று​விட்​டு, அக்​கட்சிக்கு எதி​ராக அமைச்​சர் ஷாஜ​கான் பேசுவது ஆணவத்​தின் வெளிப்​பாடு என மமக தலை​வர் ஜவாஹிருல்லா எம்​எல்ஏ குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

நாகை தொகுதி எம்​எல்ஏ அலு​வலக திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. ஜவாஹிருல்லா அலு​வல​கத்தை திறந்து வைத்​தார். அவருக்கு நாகை மாவட்ட திமுக செய​லா​ளர் கவுதமன் உள்​ளிட்​டோர் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ஜவாஹிருல்லா கூறியது: தமிழகத்​தில் ஒரே நாளில் 5 பெண் குழந்​தைகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளனர். குற்​ற​வாளி​களை தண்​டிக்​கும் வகை​யில் சிறப்பு நீதி​மன்​றங்​களை அதி​கரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

சிறு​பான்​மை​யினர் வாக்​கு​கள் திமுக​வுக்கு கிடைக்​க​வில்லை என்​பது திட்​ட​மிட்டு பரப்​பப்​படும் வதந்​தி​யாகும். தவெக தேர்​தல் அறிக்​கை​யில் கொடுத்த ஒரு வாக்​குறு​தி​யைக் கூட இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. தி​முக போட்டசாலை​யில் பயணித்​து, திமுக​வினர் தயவால் வெற்​றி​பெற்ற அமைச்​சர் ஷாஜ​கான் திமுக​வுக்கு எதி​ராக பேசுவது ஆணவத்​தின் வெளிப்​பாடு. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

இதற்கிடையே, ஷாஜகானை விமர்​சித்து நேற்று பாபநாசத்தில் திமுகவினர் சுவரொட்​டிகள் ஒட்​டியுள்ளனர். அதில் திமுகவை விமர்​சிக்​கும் அவர் மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. போலீ​ஸார் அந்​த சுவரொட்டிகளை அப்​புறப்​படுத்​தினர்.

ஜவாஹிருல்லா | கோப்புப் படம்
கரூர் கல்லூரி மாணவி கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்த சக மாணவர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in