‘பாரம்பரியத்தின் உறைவிடம் மியூசிக் அகாடமி’ - இந்தியாவுக்கான ஜப்பானிய துணைத் தூதர் புகழாரம்

‘பாரம்பரியத்தின் உறைவிடம் மியூசிக் அகாடமி’ - இந்தியாவுக்கான ஜப்பானிய துணைத் தூதர் புகழாரம்

படம்: ம.பிரபு

Updated on
1 min read

மியூசிக் அகாடமி கடந்த 99 ஆண்டுகளாக ஆற்றிவரும் கலைச் சேவை போற்றத்தக்கது என்றும், பாரம்பரியத்தின் உறைவிடமாக மியூசிக் அகாடமி திகழ்கிறது என்றும் இந்தியாவுக் கான ஜப்பானிய துணைத் தூதர் தகாஹாஷி முனியோ தெரிவித்துள்ளார்.

மியூசிக் அகாடமியின் 19வது ஆண்டு நாட்டிய விழா நேற்று சென்னை மயிலாப்பூர் டிடிகே அரங்கில் தொடங்கியது. இந்தியாவுக்கான ஜப்பானிய துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, விழாவைத் தொடங்கி வைத்து பரத நாட்டியக் கலைஞர், ஆசிரியர் ஊர்மிளா சத்தியநாராயணனுக்கு 'நிருத்திய கலாநிதி' விருதை வழங்கினார். தொடர்ந்து அகாடமியின் நாட்டிய விழா மலரையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் தகாஹாஷி முனியோ பேசியதாவது: இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாச்சாரங்களில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. கலை என்பது பண்பாட்டின் அடையாளம். இந்தியாவில் உள்ளவர்கள் ஜப்பானிய நடனத்தை கற்றுக் கொள்கின்றனர். அதேபோல் ஜப்பான் நாட்டவரும் பரத நாட்டியம் போன்ற கலைகளைக் கற்கின்றனர். பாரம்பரியத்தின் உறைவிடமாக மியூசிக் அகாடமி திகழ் கிறது. மியூசிக் அகாடமிகடந்த 99 கலைகளுக்கு ஆற்றிவரும் ஆண்டுகளாக இசை உள்ளிட்ட சேவை போற்றத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பேசியதாவது: நாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கும் இந்தியாவுக்கான ஜப்பானிய துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, 1984-ல் வெளியுறவுத் துறை அமைச் சராக நியமிக்கப்பட்டார். துனிசியா, பிலிப்பைன்ஸ், நியுயார்க், ஹவுஸ்டன், ஆஸ்தி ரேலியா, ஈரான் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

தற்போது சென்னை, தென் னிந்தியாவில் ஜப்பானிய உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறார். 2025-ம் ஆண்டுக்கான 'நிருத்திய கலாநிதி' விருதைப் பெறும் பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்திய நாராயணா பல மாணவர்களுக்கு நடனம் பயிற்று வித்து வருகிறார்.

ஜன.9-ம் தேதி வரை நடக்க விருக்கும் நாட்டிய விழாவில் பல வகைமைகளைச் சேர்ந்த நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கின்றன. இதில் பரத் நாட்டியம், கதக், குச்சி புடி, ஒடிஸி, யக்ஷகானம் உள்ளிட் டவை அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்புரை வழங்கிய ஊர்மிளா சத்தியநாராயணா, "நான் நாட்டியம் ஆடத் தொடங்கி இது 50-வது ஆண்டு ஆகும். 'நாட்டிய சங்கல்பா' என்ற நடன பள்ளியைத் தொடங்கி இது 30-வது ஆண்டு ஆகும். எனக்கு 'நிருத்திய கலாநிதி விருது கிடைத்திருப்பது மறக்க முடியாத தருணம். இந்த நேரத்தில் எனது நடன குருக்கள் பத்மஸ்ரீ கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, கலைமாமணி கே.கே.சரஸா, பத்மபூஷண் கலாநிதி நாராயணன், எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், மியூசிக் அகாடமி, சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

நிறைவில் செயற்குழு உறுப்பினர் காயத்ரி கிருஷ்ணா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியின் செயலர் என்.ராம்ஜி தொகுத்து வழங்கினார்.

‘பாரம்பரியத்தின் உறைவிடம் மியூசிக் அகாடமி’ - இந்தியாவுக்கான ஜப்பானிய துணைத் தூதர் புகழாரம்
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in