“ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர்” - தமிழிசை கண்டனம்

தமிழிசை சவுந்​தர​ராஜன்

தமிழிசை சவுந்​தர​ராஜன்

Updated on
1 min read

சென்னை: ஜல்​லிக்​கட்டை திமுக விழா​வாக மாற்​றி​விட்​டனர் என்று தமிழக பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக தி.நகரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக மக்​கள் பிரதமரின் வரு​கையை ஆவலுடன் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கின்​றனர். இதற்​காகப் பிரம்​மாண்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. பிரதமரின் வரு​கை​ 2026 பாஜகவின் வெற்​றிக்​கான அடித்​தள​மாக இருக்​கும்.

ஜல்​லிக்​கட்டு வீரர்​களுக்கு அரசு வேலை வழங்​கு​வது வரவேற்​கத்​தக்​கது. ஆனால், ஜல்​லிக்​கட்டை ‘காட்​டுமி​ராண்​டித்​தன​மான விளை​யாட்​டு’ என்று விமர்​சித்த காங்​கிரஸ் கட்​சி​யுடன் திமுக கூட்​டணி வைத்​துள்​ளது. பாஜக அரசு​தான் தடையை நீக்கி ஜல்​லிக்​கட்டை மீட்​டெடுத்​தது. ஆனால், தற்​போது அதைத் திமுக​வின் விழா​வாக மாற்​றி​விட்​டனர். இது கண்​டிக்​கத்​தக்​கது.

திமுக-காங்​கிரஸ் கட்​சிகளுக்​குள்​ளேயே ஒரு​வருக்​கொரு​வர் நம்​பிக்கை இல்​லாத சூழல் நில​வு​கிறது. 2026 தேர்​தலில் திமுக கூட்​டணி ஒன்​றாக நீடிக்​குமா என்று சொல்​ல​முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>தமிழிசை சவுந்​தர​ராஜன்</p></div>
ஜாம், ஸ்குவாஷ் தயாரிக்க பயிற்சி - தமிழ்நாடு வேளாண் பல்கலை. அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in