காதர் மொகிதீன் மகன் காலமானார்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

காதர் மொகிதீன் மகன் காலமானார்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

திருச்சி: இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனின் மூத்த மகனான ஆராய்ச்​சி​யாளர் கே.எம்​.கே.கலிலூர் ரஹ்​மான்​(59) திருச்சி அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் ஆக.1 இரவு உடல் நலக்​குறைவு காரண​மாக கால​மா​னார்.

இவருக்கு மனைவி ரஷி​தா​பானு, மகன் முஹம்​மது, மகள் சபா ஆகியோர் உள்​ளனர். திருச்சி காஜா நகர் காயிதே மில்​லத் தெரு​வில் உள்ள காதர் மொகிதீன் இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த கலிலூர் ரஹ்​மான் உடலுக்கு இலங்கை முஸ்​லிம் காங்​கிரஸ் தலை​வர் எம்.பி.ர​வூப் ஹக்​கீம், தமிழக அமைச்​சர்​கள் ரமேஷ், ஏ.எம்​.ஷாஜஹான், விஸ்​வ​நாதன், முஹம்மது பர்​வேஸ், முன்​னாள் அமைச்சர்​கள் கே.என்​.நேரு, அன்​பில் மகேஸ்பொய்​யாமொழி, சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.வளர்​மதி உள்​ளிட்​டோர் அஞ்​சலி செலுத்​தி ஆறுதல் தெரிவித்தனர்.

கலிலூர் ரஹ்​மான் உடலுக்கு நேற்று மாலை திருச்சி காஜா நகர் அன்​வாருல் உலூம் அரபிக் கல்​லூரி​யில் அஸர் தொழுகை, ஜனாஸா தொழுகை நடத்​தப்​பட்​டு, காஜாமலை அடி​வாரம் அரு​கில் உள்ள கபர்​ஸ்​தானில் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

முதல்​வர் விஜய்: தனது அன்பு மகனை இழந்து தவிக்​கும் காதர் மொகிதீனுக்​கும், அவரது குடும்​பத்​தினருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​ தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: துயர் தாளாது வேதனை​யில் வாடும் காதர் மொகிதீனை தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​தேன்.

இதே​போல், காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், பாமக தலை​வர் அன்​புமணி, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, தி.க. தலை​வர் கி.வீரமணி, அமமுக பொதுச்​செய​லாளர் டிடிவி தினகரன் இரங்​கல் தெரி​வித்துள்ளனர்.

காதர் மொகிதீன் மகன் காலமானார்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in