புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: போனில் வாழ்த்திய தமிழக முதல்வர் விஜய்

புதுச்சேரி பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் என்.ரங்கசாமி.

புதுச்சேரி பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் என்.ரங்கசாமி.

படம்.எம்.சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரி: “நல்லா போயிட்டு இருக்கு சார்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது தமிழக முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் விஜய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விஜய் முதல் மாநாடு நடக்கும்போது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தார். அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் விஜயுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டி வருகிறார்.

இதனிடையே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் ஆனந்த் போனில் புதுவை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "நன்றி, நல்லா போய்ட்டு இருக்கா" என்று கேட்டார். அதற்கு தமிழக முதல்வர் விஜய், "நல்லா போயிட்டு இருக்கு சார்"என கூறினார்.

அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, "நல்லா பண்ணுங்க, நேரில் வந்து பார்க்கிறேன். நல்லா இருங்க" என்று கூறினார். அதற்கு தமிழக முதல்வர் விஜய், “சரிங்க சார்” என்று கூறினார்.

<div class="paragraphs"><p><em>புதுச்சேரி பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் என்.ரங்கசாமி.</em></p></div>
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in