திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தீவிரம்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோருவதால் பதற்றம்

தீபம் ஏற்றும் விவகாரத்தை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீபம் ஏற்றும் விவகாரத்தை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated on
1 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டுமென்ற நீதி​மன்ற உத்​தரவை நடை ​முறைப்​படுத்​தக் கோரி இந்து அமைப்​பு​கள் வலி​யுறுத்துவதல், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கார்த்​திகை தீபத்​தையொட்டி இன்று (டிச. 3) திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விடக் கோரிய மனுக்​களை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, “திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் 6-ம் நூற்​றாண்​டில் இருந்து கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படு​கிறது.

தற்​போது கோயில் நிர்​வாகம் அனு​மதி மறுத்​து, மோட்ச தீபம் ஏற்றும் இடத்​தின் அருகே தீபம் ஏற்ற உத்​தர​விட்​டுள்​ளது ஆகம விதி​களுக்கு எதி​ரானது. இவ்​வாண்டு முதல் தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும்” என்று உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்​தக் கோரி, வழக்கு தொடர்ந்த ராமரவிக்​கு​மார் மற்றும் இந்து அமைப்​பினர் கோயில் நிர்​வாகத்​திடம் நேற்று மனுக்​களை அளித்​தனர்.

‘நீ​தி​மன்ற உத்தரவை நடை​முறைப்படுத்த தவறி​னால், நாங்களே தீபத்​தூணில் தீபம் ஏற்றுவோம்’ என்​றும் அவர்​கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்​றம் நிலவுகிறது. இதையடுத்​து, மதுரை மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன் மேற்​பார்​வை​யில், துணை ஆணை​யர் இனிகோ திவ்யன் தலை​மை​யில் 500-க்​கும் மேற்பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட் டுள்ளனர்.

<div class="paragraphs"><p>மலை உச்சியில் உள்ள தீபத்தூணைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p></div>

மலை உச்சியில் உள்ள தீபத்தூணைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மலைக்குச்செல்லும் பாதை,அவனியாபுரம் சாலையில் உள்ள படிக்​கட்டுப் பாதை பகு​தி​களில் நேற்று இரவு முதலே போலீ​ஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.கூடு​தல் சிசிடிவிக்கள் பொருத்​தி​ கண்​காணிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கேட்​ட​போது, “கோயில் நிர்வாகம் சார்​பில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்​தால், உரிய பாது​காப்பு வழங்​கப்​படும். ஆனால் யாரும் மலைக்கு மேல் செல்ல அனு​மதி கிடை​யாது’ என்​றனர்.

மேல்முறையீடு இதனிடையே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடைகோரியும் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் தரப்பில் உயர் நீதிமன்றமதுரை அமர்வில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>தீபம் ஏற்றும் விவகாரத்தை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p></div>
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in