சென்னை மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு நியமன மன்ற உறுப்பினர் ஆணை வழங்கல்

ஜான்சி உமா, பாலாஜி

ஜான்சி உமா, பாலாஜி

Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான நியமன மன்ற உறுப்​பினர்​களாக தேர்வு செய்​யப்​பட்ட பா.ஜான்சி உமா மற்​றும் பா.​பாலாஜி ஆகியோ​ருக்கு மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன் உறுப்​பினர் ஆணையை வழங்​கி​னார்.

கடந்த ஏப்​ரல் மாதம் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத் தொடரில், தமிழக நகர்ப்​புறம் மற்​றும் ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் வழங்க வகை செய்​யும் சட்ட மசோ​தாக்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தாக்​கல் செய்​தார்

அதைத் தொடர்ந்​து, மாற்​றுத் திற​னாளி​களை ஊராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்​சி, ஒன்​றி​யம் மற்​றும் மாவட்ட ஊராட்​சிகளில் நியமன மன்ற உறுப்​பினர்​களாக நியமிக்க தமிழக அரசு உத்​தர​விட்டு அரசாணை வெளி​யிட்​டது.

அதன்​படி, இந்த சட்​டத்​தின் மூலம் தமிழகத்​தில் மொத்​தம் 13,988 மாற்​றுத் திற​னாளி​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களில் வாய்ப்பு கிடைக்​கும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த உறுப்​பினர்​கள் தேர்​தலில் போட்​டி​யி​டா​மல், நியமனம் மூலம் பதவி​களுக்கு தேர்வு செய்​யப்​படு​வார்​கள்.

அதனடிப்​படை​யில், சென்னை மாநக​ராட்சி மாமன்​றத்​திற்கு நியமன மாற்​றுத் திற​னாளி உறுப்​பினர்​களாக பா.ஜான்சி உமா மற்​றும் பா.​பாலாஜி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கு, நியமன உறுப்​பினர்​களுக்​கான ஆணையை சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன்​ நேற்​று வழங்​கி​னார்​.

<div class="paragraphs"><p>ஜான்சி உமா, பாலாஜி</p></div>
காசி தமிழ் சங்கமம் 4-வது பதிப்பு தமிழ் இந்தியாவின் பெருமிதம் என பிரதமர் மோடி உறுதிபடுத்தியுள்ளார்: எல்.முருகன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in