புதிய பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்: முதல்வர் பரிசீலனை செய்ய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

புதிய பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்: முதல்வர் பரிசீலனை செய்ய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: புதிய பர்மிட் வழங்​கு​வது தற்​காலிக​மாக நிறுத்​தப்​படுள்​ள​தாக கடும் வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக​வும், முதல்​வர் பரிசீலனை செய்ய வேண்​டும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து முதல்​வருக்கு சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் அன்​பழகன் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஆம்னி பேருந்​துகளுக்​கான பர்​மிட் வழங்க ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பித்த 270 பேருக்கு அனுமதி கொடுக்​கப்​பட்​டன.

இதனையடுத்து 300 பர்​மிட்​களுக்​கான அனு​மதி கடந்த ஒரு மாத​மாக வழங்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் உள்​ளன. ஏற்​கெனவே பர்​மிட் பெற்​று, காலாண்டு சாலை வரி​யாக ஒரு பேருந்​துக்கு ரூ.1.50 லட்​சம் செலுத்​தி​யும், போக்​கு​வரத்து ஆணை​யரின் இறுதி ஒப்​புதல் கிடைக்​காத​தால் பல பேருந்​துகளை இயக்க முடி​யாமல் உரிமை​யாளர்​கள் பெரும் நஷ்டத்​தைச் சந்​தித்து வரு​கின்​றனர்.

இந்த துறை மூலம் அரசுக்கு ஆண்​டு​தோறும் கிடைக்​கும் ரூ.900 கோடி நேரடி வரு​வா​யும், ரூ.3 ஆயிரம் கோடி மறை​முக வரு​வா​யும் பாதிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

அதே​போல், தமிழகத்​தில் உள்ள 22 எல்லை சுங்​கச் சாவடிகளி​லும் ஒரு வாக​னத்​துக்கு ரூ.500 முதல் ரூ.3,000 வரை கையூட்டு பெறப்​படு​கிறது. கோயம்​பேடு ஆம்னி பேருந்து நிலை​யத்​தில் 150 பேருந்​துகளை மட்​டுமே நிறுத்த முடி​யும் என்ற நிலை உள்ள போது, தினசரி 1,200 பேருந்​துகள் இயக்​கப்​படு​வ​தால் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது.

இதனால், தற்​போது முழு​மை​யாகப் பயன்​படுத்​தப்​ப​டா​மல் உள்ள கோயம்​பேடு சி.எம்​.டி,ஏ பேருந்து நிலை​யத்தை ஆம்னி பேருந்​துகளின் பயன்​பாட்​டுக்கு தற்​காலிக​மாகவோ அல்​லது நிரந்​தர​மாகவோ வழங்க வேண்​டும். முதல்​வர் இந்த கோரிக்​கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

புதிய பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்: முதல்வர் பரிசீலனை செய்ய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
சதுப்பு நிலத்தில் தடுப்பு சுவர் கட்டினால் பள்ளிக்கரணை பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும்: சவுமியா அன்புமணி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in