குலசேகரன்பட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

குலசேகரன்பட்டினத்தில்  இருந்து முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
Updated on
1 min read

சென்னை: இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்பட்டினத்​தில், புதி​தாக தொடங்​கப்​படும் ராக்கெட் ஏவுதளத்​தின் பணி​கள் திட்​ட​மிட்​டபடி நடை​பெற்று வரு​கின்றன. குலசேகரன்பட்​டினம் ராக்கெட் ஏவுதளத்​தில் இருந்​து, 2027 மார்ச் மாதத்​துக்​குள் முதல் ராக்கெட் விண்​ணில் செலுத்​தப்​படும்.

2040-ம் ஆண்​டில் இந்​தியா மனிதனை நில​வுக்கு அனுப்பி வைக்​கும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். அதற்​கேற்ப ஆராய்ச்​சிகள், செயல்​பாடு​கள் தற்​போது தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அதற்கு முன்​பாக சந்​திர​யான்​-4, சந்​திர​யான்-5 விண்​கலங்​கள் அனுப்​பப்பட இருக்​கின்​றன.

தொடர்ந்து, இந்​தி​யா - ஜப்​பான் கூட்டு முயற்​சி​யில் உரு​வாக்​கப்​படும் சந்​திர​யான் திட்​ட​மும் செயல்​படுத்​தப்பட இருக்​கிறது. இந்த திட்​டத்​தில் 6,500 கிலோ எடை கொண்ட லேண்​டர் மற்​றும் 350 கிலோ எடையி​லான ரோவர் அனுப்​பப்பட இருக்​கின்​றன. இது 2028-ம் ஆண்டு விண்​ணில் ஏவப்பட இருக்​கிறது.

மேலும், இந்​தாண்டு பிஎஸ்​எல்​வி, ஜிஎஸ்​எல்​வி, எல்​விஎம் 3 மற்​றும் ஆளில்லா ககன்​யான் விண்​கலம் என அதி​க​மான ராக்கெட்கள் விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

குலசேகரன்பட்டினத்தில்  இருந்து முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்: காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கம் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in