இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்: காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கம் கருத்து

மகாதானபுரம் ராஜாராம்

மகாதானபுரம் ராஜாராம்

Updated on
1 min read

கரூர்: இந்​தி​ய-அமெரிக்கா ஒப்​பந்​தம், நாட்​டின் பொருளா​தா​ரத்தை சர்​வ​தேச அளவில் உயர்த்​தும் என்று காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்​கத் தலை​வர் மகா​தானபுரம் ராஜா​ராம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​திய- அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தம் கடந்த 18 ஆண்​டு​களாக இழுபறி​யில் இருந்​தது. இதனால், இந்​திய விவ​சாயப் பொருட்​கள், பால் பொருட்​கள் மீது 100% வரி விதிக்​கப்​பட்​டது.

புதிய ஒப்​பந்​தப்​படி, அமெரிக்கா பாதாம், அக்​ரூட் பருப்​பு​கள், ஆப்​பிள், பால், சோளம் ஆகிய​வற்றை இந்​தி​யா​வுக்கு அனுப்​பி​னாலும், நமது விவ​சா​யம் அழி​யாது. தற்​போது இந்​திய விவ​சா​யம் முழு முனைப்​புடன் செயல்​பட்டு வரு​கிறது.

மாவட்​டத்​துக்கு ஒரு பயிர் உற்​பத்​தி​யாளர் குழு செயல்​படு​கிறது. வேளாண் பொருட்​களில் இருந்து எத்​த​னால், ஸ்டார்ச், செல்​லுலோஸ், வேதிப் பொருட்​கள் தயாரிக்​கும் விவசாயிகள், தொழில்​முனை​வோ​ராக மாறி​யுள்​ளனர். கிராமப்​புற தொழில்​கள் வளரத் தொடங்​கி​விட்​டன.

இந்​திய மருந்​து, உயி​ரியல் பொருட்​கள், தொலைத்​தொடர்​புக் கருவி​கள், விலை மதிப்​பற்ற கற்​கள், பெட்​ரோல் பொருட்​கள், வாக​னங்​கள், உதிரி பாகங்​கள், தங்​கம், பிற மதிப்​புள்ள உலோக நகைகள், பருத்தி ஆயத்த ஆடைகள், இரும்​பு, எஃகு பொருட்​கள், இந்​தி​யப் பொருட்​களுக்கு தாராள​மான சந்​தை​யாக அமெரிக்கா இருக்​கும்.

இந்​தி​ய-அமெரிக்க ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யப் பொருளா​தா​ரம் சர்​வ​தேச அளவில் முதல் நிலையை அடை​யும். இந்​திய விவ​சா​யிகளுக்கு நல்ல எதிர்​காலத்தை உண்​டாக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>மகாதானபுரம் ராஜாராம்</p></div>
ராமேசுவரம் - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in