“சட்டம் - ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முதல்வருக்கு நேரம் வரவில்லையா?” - வானதி சீனிவாசன்

நாங்குநேரி கொலை சம்பவத்தை முன்வைத்து கேள்வி
வானதி சீனிவாசன்| கோப்புப் படம்

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘கூட்டணி பேச்சு வார்த்தை, ஊருக்கு ஊர் மாநாடு செல்வதற்கு நேரம் இருக்கும் உங்களுக்கு, தமிழகத்துக்கு சட்டம் - ஒழுங்கு டிஜிபியை நியமிக்க இன்னும் நேரம் வரவில்லையா?’ என நாங்குநேரி சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நெல்லை நாங்குநேரியில் நேற்று இரவு இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் சாதிய தீண்டாமையால் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை பாதிக்கப்பட்ட சுவடுகள் மறைவதற்குள் அதே பகுதியில் மீண்டும் இப்படி ஒரு கொடூர செயல் அரங்கேறியிருப்பது சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது.

பொது மக்களுக்குப் பாதுகாப்பில்லாத, மக்கள் விரோத தீய சக்தி திமுக ஆட்சி என்பதை தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. போகிற போக்கில் நடைபெறும் கொலைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சாதியக் கொடுமைகளும் விடியா மாடல் திமுக ஆட்சியில் உச்சம் பெற்றுள்ளது.

காலை எழுந்தவுடன் இன்று என்ன அறிவிப்பை வெளியிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் முதல்வரே, தமிழக மக்களுக்கு இதுபோன்ற துன்பங்களிலிருந்து எப்போது விடிவு பிறக்கும்?

கூட்டணி பேச்சு வார்த்தை, ஊருக்கு ஊர் மாநாடு செல்வதற்கு நேரம் இருக்கும் உங்களுக்கு, தமிழகத்துக்கு சட்டம் - ஒழுங்கு டிஜிபியை நியமிக்க இன்னும் நேரம் வரவில்லையா? அதுவரை தமிழகம் இன்னும் இதுபோன்ற எத்தனை குற்றச் செயல்களை பார்க்கப் போகிறதோ தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். படுகாயமடைந்தோர் விரைவில் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வானதி சீனிவாசன்| கோப்புப் படம்</p></div>
‘முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எழுவாரா?’ - நாங்குநேரி சம்பவத்தில் இபிஎஸ், விஜய் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in