தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?

விஜய் |கோப்புப் படம்

விஜய் |கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது.

தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வந்​தனர். தேர்​தல் முடிந்​துள்ள நிலை​யில், தற்​போது அவர்​கள் தங்​களை ஆசு​வாசப்​படுத்​திக் கொள்​வதற்​காக சுற்​றுலாத் தலங்​களுக்​கு சென்று வரு​கிறார்​கள்.

அந்த வகையில், தவெக தலை​வர் விஜய்​யும் வரும் மே 4-ம் தேதி ஆஸ்​திரேலியா செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகிப் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அன்​றைய தினம்​தான் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக இருப்​பது​தான் இதற்கு காரணம்.

இதுகுறித்​து, தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பொது​வாக விஜய் தனது படங்​களின் படப்​பிடிப்பு முடிந்த பிறகு, வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொள்​வதை வழக்​க​மாக வைத்​திருந்​தார்.

தற்​போது, தேர்​தல் பணி​கள் முடிவடைந்​துள்ள நிலை​யில், அவர் வெளி​நாடு செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளார். அதன்​படி, தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக​வுள்ள 4-ம் தேதி அவர் ஆஸ்​திரேலியா செல்​லக் கூடும் என்று கூறப்​படு​கிறது. இதற்​காக அவர் டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

இருப்​பினும், தேர்​தலில் வெற்றி பெற்று நாங்​கள்​தான் ஆட்சி அமைப்​போம் என்​கிற அசைக்க முடி​யாத நம்​பிக்கை இருக்​கிறது. எனவே, அன்​றைய தினம் முடிவு​கள் எங்​களுக்​குச் சாதக​மாக இருந்​தால், தலை​வர் வெளி​நாடு செல்​லும் முடிவைக் கைவிட்​டு​விடு​வார். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>விஜய் |கோப்புப் படம்</p></div>
அதிமுகவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை தேவை: பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in