ரங்கசாமியின் 2 தொகுதி சென்ட்டிமென்ட்டை பின்பற்றுகிறாரா விஜய்?

ரங்கசாமியின் 2 தொகுதி சென்ட்டிமென்ட்டை பின்பற்றுகிறாரா விஜய்?
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்​சேரி முன்​னாள் எம்​எல்ஏ புஸ்ஸி ஆனந்த் வழி​யாக, முதல்​வர் ரங்​க​சாமிக்​கும், தவெக தலை​வர் விஜய்க்​கும் நீண்ட கால​மாக நல்ல நட்பு உள்​ளது. பனையூர் சென்று விஜய்யை ரங்​க​சாமி சந்​தித்து பேசி வந்​தா​லும் அதுபற்றி வெளி​யில் எப்​போதும் வாய் திறந்​த​தில்​லை.

விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாட்டை விக்​கிர​வாண்​டி​யில் நடத்​தி​ய​போது, தனது வீட்​டின் அரு​கில் உள்ள அப்பா பைத்​தி​யம் சுவாமி கோயி​லில் வைத்​து, புஸ்ஸி ஆனந்த்​துக்கு எலுமிச்​சம் பழம் கொடுத்து ஆசிர்​வாதம் செய்து அனுப்பி வைத்​தார். தொடர்ந்து அந்த மாநாட்டை தனது வீட்​டில் இருந்​த​படி தொலைக்​காட்​சி​யில் பார்ப்​ப​தை, ஊடகங்​களுக்கு தெரியப்​படுத்​தி​னார். இரண்​டாவது மாநாட்​டுக்​கும் விஜய்​யின் பிறந்த ராசி, நட்​சத்​திரத்தை வைத்து தேதி, நேரம் குறித்​துக் கொடுத்​தாக பரவலாக பேசப்​பட்​டது.

என்​டிஏ கூட்​ட​ணி​யில் ரங்​க​சாமி இருந்​தா​லும் விஜய் மீது தனிப் பாசம் உண்​டு. சட்​டப்​பேர​வைத் தேர்​தலை தவெக​வுடன் இணைந்து சந்​திக்​க​வும் ரங்​க​சாமி திட்​ட​மிட்டு இருந்த சூழலில், மத்​திய அமைச்​சர் அமித் ஷா தலை​யீட்​டால், மீண்​டும் புதுச்​சேரிக்​கான என்​டிஏ கூட்​ட​ணிக்கு ரங்​க​சாமி தலை​மையேற்​றுள்​ளார். தன் மீதான பல புகார்​களுக்கு ரங்​க​சாமி வாய் திறக்​க​மாட்​டார். அமை​தி​யாக இருந்து திடீரென ஒரு ‘ஃபயர்’ காட்​டு​வார். இதே முறையை விஜய்​யும் அரசி​யலில் கடைப்​பிடிக்​கிறார்.

இப்​போது ரங்​க​சாமியைப் போல், விஜய் இரு தொகுதி சென்​டிமென்​டில் போட்​டி​யிடு​கிறார். முதல்​வர் ரங்​க​சாமி கடந்த 2011-ல் என்​.ஆர். காங்​கிரஸ் தொடங்​கிய பிறகு கதிர்​காமம், இந்​தி​ராநகர் ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு இரண்​டிலும் வெற்றி பெற்​றார். பின்​னர் இந்​தி​ராநகர் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். அப்​போது முதல்​வ​ரா​னார்.

2016-ல் தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யில் மட்​டும் போட்​டி​யிட்​டார். அப்​போது எதிர்க்​கட்​சித் தலை​வ​ரா​னார். ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்​ட​தால் முதல்​வ​ராக முடிய​வில்லை எனக்​கரு​தி, கடந்த 2021-ல் ஏனாம் மற்​றும் தட்​டாஞ்​சாவடி​யில் போட்​டி​யிட்​டார்.

இதில் ஏனாம் தொகு​தி​யில் தோல்வி அடைந்​தா​லும், தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யில் வெற்றி பெற்று முதல்​வர் ஆனார். இரண்டு தொகு​தி​யில் போட்​டி​யிட்​டால் முதல்​வ​ராகலாம் என்ற சென்​டிமென்ட்​டால் தற்​போது மீண்​டும் 3 வது முறை​யாக 2 தொகு​தி​களில் முதல்​வர் ரங்​க​சாமி போட்​டி​யிடு​கிறார்.

ரங்​க​சாமிக்கு மிக நெருக்​க​மான தவெக தலை​வர் விஜய்​யும் முதல் முறை​யாக தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறார்.

இதுபற்றி என்​ஆர்​காங்​கிரஸ் - தவெக வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, “ரங்​க​சாமி​யும் விஜய்​யும் அடிக்​கடி பேசிக்​கொள்​வார்​கள். நீண்ட நட்பு உண்​டு. தேர்​தலின்​போது சில ஆலோ​சனை​களை விஜய்க்கு ரங்​க​சாமி சொல்லி வரு​கிறார். அதே​போல் தனது இரு தொகுதி சென்​டிமென்ட்டை சொல்​லி​யிருக்​கலாம்” என்​றனர்.

தமிழகத்​தில் ஜெயலலிதா கடந்த 1991-ல் காங்​கே​யம், பர்​கூர் ஆகிய இரு தொகு​தி​களில் போட்​டி​யிட்டு இரண்​டிலும் வென்று முதல்​வ​ரா​னார். பின்​னர் காங்​கே​யம் தொகு​தியை அவர் ராஜி​னாமா செய்​தார். அதையடுத்து 1996-ல் பர்​கூரில் மட்​டும் போட்​டி​யிட்டு தோற்​றார். இதை​யும் கூட தவெக​வில் உயர்​மட்ட பொறுப்​பில் இருப்​பவர்​கள் விஜய்க்கு எடுத்​துச் சொல்​லி​யிருக்​கலாம். இவற்​றையெல்​லாம் சீர்​தூக்​கிப் பார்த்து விஜய் இரு தொகு​தி​களில்​ களமிறங்​க தீர்​மானித்​திருக்​கலாம்​ என்​ற பேச்​சும்​ அடிபடுகிறது.

ரங்கசாமியின் 2 தொகுதி சென்ட்டிமென்ட்டை பின்பற்றுகிறாரா விஜய்?
​ஸ்டாலினின் கையிருப்பு ரூ.10 ஆயிரம் மட்டுமே: விஜய்க்கு ரூ.404 கோடிக்கு அசையும் சொத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in