“ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதுதான் மக்களுக்கான தீபாவளி பரிசா?” - பழனிசாமி

“ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதுதான் மக்களுக்கான தீபாவளி பரிசா?” - பழனிசாமி
Updated on: 
1 min read

சென்னை: “மக்களுக்கு வெற்றி தீபாவளி பரிசாக ஆவின் பொருட்களின் விலையை தவெக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தமிழக மக்களுக்கு வெற்றி தீபாவளி பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “பிளாக் டிக்கெட்”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!

“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை நியமனம் செய்துள்ளீர்கள் முதல்வர்.

மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

“ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதுதான் மக்களுக்கான தீபாவளி பரிசா?” - பழனிசாமி
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? - வெளியான அதிர்ச்சி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in