தமிழக பாஜகவின் புதிய தலைவர் சரத்குமார்?

தமிழக பாஜகவின் புதிய தலைவர் சரத்குமார்?
Updated on: 
1 min read

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியதைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிபட்டாலும், பாஜகவில் ஏற்கெனவே மாநிலத் தலைவராகப் பணியாற்றியவர்களை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது இல்லை என்பதால், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

அந்த வகையில், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், வானதி சீனிவாசன் ஆந்திர மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாநிலத்துக்குப் பொறுப்பில் உள்ளவர் மற்றொரு மாநிலத்தின் தலைவராக நியமிக்கப்படமாட்டார்.

தற்போதைய தமிழக அரசியல் களம் விஜய், உதயநிதி, தனுஷ் என நடிகர்களைச் சுற்றியே நகர்ந்து வருவதால், பொதுமக்களிடையே ஏற்கெனவே நன்கு பரிச்சயமான ஒரு முகத்தை மாநிலத் தலைவராகக் கொண்டுவந்தால் கட்சிப் பணிகளையும் தேர்தல் வியூகங்களையும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்று பாஜக மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, நடிகர் சரத்குமாரை தமிழக பாஜக தலைவராகநியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

தமிழக பாஜகவின் புதிய தலைவர் சரத்குமார்?
மின்சாரம் கொள்முதலில் முறைகேடு இல்லை: பழனிசாமிக்கு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in