திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு கழிப்பறை குழாய் நீரை கலந்து சிகிச்சை? - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு கழிப்பறை குழாய் நீரை கலந்து சிகிச்சை? - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
Updated on: 
1 min read

திருவள்ளூர்: அரசு மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு சோடி​யம் குளோரைடு பாட்​டிலில் கழிப்​பறை குழாய் நீர் கலந்து சிகிச்சை அளிக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது.

திருவள்ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் கடந்த 22-ம் தேதி இரவு குடும்​பத் தகராறு காரண​மாக, மது​வில் விஷம் கலந்து குடித்து தற்​கொலைக்கு முயன்​றாக கூறப்​படு​கிறது.

இதையடுத்து பெரிய​பாளை​யம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் முதலுதவி சிகிச்சை பெற்ற லோகேஷ், மேல் சிகிச்​சைக்​காக நேற்று முன்​தினம் அதி​காலை​யில் திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அவரது உடலில் உள்ள நச்​சுக் கழி​வு​களை வெளி​யேற்ற, நீரில் சோடி​யம் குளோரைடு கலந்து அதை அவரது மூக்​கில் டியூப் வைத்து அதன்​மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. அந்த தண்​ணீர் மருத்​து​வ​மனை கழிப்​பறை குழாய் தண்​ணீர் என, லோகேஷ் தரப்​பில் புகார் கூறப்​படு​கிறது.

ஆனால், மருத்​து​வ​மனை ஊழியர்​கள் தரப்​பிலோ, கழிப்​பறை அருகே உள்ள குழாய் நீரில்​தான் சோடி​யம் குளோரைடுடன் கலக்​கப்​பட்​டது என கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​களின் அலட்​சி​யப் போக்​கால், ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர் கழிப்​பறை குழாய் நீரை ஊற்​றிய​தாக லோகேஷ் மற்​றும் அவருடன் வந்த நண்​பர்​கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து மருத்​து​வ​மனை நிர்​வாகத்​திடம் முறை​யிட்​டுள்​ளனர்.

உரிய பதில் கிடைக்​காத​தால் ஆத்​திரம் அடைந்த உறவினர்​கள், போலீ​ஸாரை வரவழைத்து சம்​பவம் குறித்து தெரி​வித்​து​ விட்​டு, லோகேஷ் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட விவரங்​கள் அடங்​கிய குறிப்​பேட்டை எடுத்துக் கொண்​டு, மருத்​து​வ​மனையி​லிருந்து வெளி​யேறினர்.

தொடர்ந்து அவர் தனி​யார் மருத்​து​வ​மனையில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கி​றார். இந்​நிலை​யில் லோகேஷ் தரப்​பினர் எடுத்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இதுகுறித்து திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் பாலாஜி செய்​தி​யாளர்​களிடம் தெரிவிக்​கை​யில், ``சோடி​யம் குளோரைடு பாட்​டிலில் கழிப்​பறை குழாய் நீரை தூய்​மைப் பணி​யாளர் கலந்​த​தாக எழுந்​துள்ள புகார் தொடர்​பாக தமிழ்​நாடு மருத்​து​வக் கல்வி இயக்​குநரகம் விளக்​கம் கேட்​டுள்​ளது.

மருத்​து​வக் கல்வி இயக்​குநரகத்​துக்கு அறிக்கை அனுப்​பி​யுள்​ளோம். மருத்​து​வக் கல்வி இயக்​குநரக குழு​வின் விசா​ரணைக்​குப் பிறகு தவறு இருப்​பின் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்'' என்​றார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு கழிப்பறை குழாய் நீரை கலந்து சிகிச்சை? - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
திருமண மோசடிகளை தடுக்கும் வகையில் மேட்ரிமோனி தளத்தில் ஆதார் மூலம் பயனர் சரிபார்ப்பு: தமிழக அரசு அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in