ஆதார் அட்டை கோரி ஜமாபந்தியில் தரையில் அமர்ந்து திருக்கழுகுன்றத்தில் இருளர் மக்கள் போராட்டம்

| படம்:எம்.முத்துகணேஷ் |

| படம்:எம்.முத்துகணேஷ் |

Updated on
1 min read

மாமல்​லபுரம்: திருக்​கழுகுன்​றத்​தில் நடை​பெற்ற ஜமாபந்​தி​யில், ஆதார் அட்​டை, ரேஷன் அட்டை உள்​ளிட்​ட​வற்றை வழங்​கக்​ கோரி, இருளர் மக்​கள் தரை​யில் அமர்ந்து தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுகுன்​றம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் வரு​வாய்த் துறை சார்​பில், 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற ஜமாபந்​தி​யில், மாமல்​லபுரம் குறு​வட்​டத்​துக்கு உட்​பட்ட பல்​வேறு ஊராட்​சிகளை சேர்ந்த பொது​மக்​கள் தங்​களின் கோரிக்​கைகளை மனுக்​களாக வழங்​கினர்.

மேலும், மாமல்​லபுரத்​தில் கடற்​கரையோரம் தங்​கி​யுள்ள 40 குடும்​பங்​களை சேர்ந்த இருளர் இன மக்​கள், பலமுறை மனு அளித்​தும் தங்​களுக்கு ஆதார் அட்​டை, ரேஷன் அட்டை உள்​ளிட்​ட​வற்றை வழங்க எந்​த​வித நடவடிக்​கைகளை​யும் அதி​காரி​கள் எடுக்​க​வில்லை எனக்​கூறி, ஜமாபந்​தி​யில் தரை​யில் அமர்ந்து தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, திருப்​போரூர் எம்​எல்ஏ விஜய​ராஜ் ஜமாபந்​திக்கு நேரில் வந்​து, தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்ட பெண்​களிடம் குறை​களை கேட்​டறிந்​தார்.

இதில், அடை​யாள அட்​டைகள் இல்​லாத​தால், தங்​களின் குழந்​தைகளை பள்​ளி​யில் கூட சேர்க்க முடி​யாத நிலை உள்​ள​தாக​வும், நடு​வக்​கரை ஊராட்​சி​யில் இடம் ஒதுக்கி பட்டா வழங்​கிய நிலை​யில், தங்​களுக்​கான நிலம் எது​வென இது​வரை தெரிய​வில்லை எனவும் கூறினர்.

இதையடுத்​து, ஆட்​சி​யரின் நேர்​முக உதவி​யாளர் விஜயகு​மாரி, “வரும் சனிக்​கிழமை, உங்​களது பகு​தி​யில் சிறப்பு முகாம் ஏற்​பாடு செய்​யப்பட்டுள்ளது, முகாமில் பங்​கேற்று உங்​களுக்கு தேவை​யான ஆதார் அட்​டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை பயன்​பெறுங்​கள்” என தெரி​வித்​தார்.

மேலும், இலவச வீட்டு மனை பட்டா மற்​றும் மின் இணைப்பு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்கை தொடர்​பாக மனுக்​களை, பொது​மக்​கள் எம்​எல்​ஏ​விடம் வழங்​கினர். இதில், துணை வட்​டாட்​சி​யர் சந்​திரசேகர் உள்பட வரு​வாய்த் துறை​யினர்​, மக்​கள்​ கலந்​து ​கொண்​டனர்.

மணமை ஊராட்​சி​யின் முன்​னாள் தலை​வர் வீரா​சாமி வழங்​கிய மனு​வில், “பக்​கிங்​காம் கால்​வா​யில் உள்ள இறால் பண்​ணை​களை அகற்ற வேண்​டும். அவற்​றுக்கு மின் இணைப்பு வழங்​கிய அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மேலும், ஏரி​யில் நீர் நிரம்பி செல்​லும் கலங்​களை தடுத்​து, தனி​யார் ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​துக்கு சாதக​மாக கலங்​களை அகற்​றியுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதனால், புதி​தாக பொறுப்​பேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” எனக் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>| படம்:எம்.முத்துகணேஷ் |</p></div>
மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in