சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து வழக்கில் மேலதிக விசாரணை தீவிரம்

நீதிமன்ற உத்தரவால் ஊழல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை
சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: ​முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் மீதான சொத்து வழக்​கில், நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் ஊழல் தடுப்பு போலீ​ஸார் மேல​திக விசா​ரணையை தீவிர​மாக மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் வெற்றி பெற்ற முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்​ச​ராக இருந்த காலக்​கட்​டத்​தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக, புதுக்​கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு போலீ​ஸார் கடந்த 2021-ல் வழக்​குப் பதிவு செய்​தனர்.

மறு​நாள் விஜய​பாஸ்​கருக்கு சொந்​த​மான வீடு, கல்​கு​வாரி, அலு​வல​கம் உள்பட தமிழகம் முழு​வதும் 56 இடங்​களில் ஊழல் தடுப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இந்த வழக்கு புதுக்​கோட்டை மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வந்​தது. வழக்கு விசா​ரணை​யின்​போது, விஜய​பாஸ்​கர், ரம்யா ஆகியோர் அவ்​வப்​போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்​கின் ஆவணங்​களை முறை​யாக ஆய்வு செய்​ய​வில்லை என விஜய​பாஸ்​கர் தரப்பு வழக்​கறிஞர்​கள் வாதிட்​டனர். மேலும், விஜய​பாஸ்​கரின் மனைவி ரம்யா பெயரிலும் கடன் வாங்​கப்​பட்​டுள்​ள​தால், அதுதொடர்​பான ஆவணங்​கள், இரு​வரின் வணிக நடவடிக்​கைகள், வாக​னங்​கள் வாங்​குதல் மற்​றும் விற்​பனை செய்​ததற்​கான ரசீதுகள் போன்ற கூடு​தல் ஆவணங்​களை​யும் விசா​ரிக்க அனு​ம​திக்க வேண்​டும் என நீதி​மன்​றத்​தில் இரு​வர் சார்​பிலும் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இதை ஏற்​றுக்​கொண்ட அப்​போ​திருந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், கூடு​தல் ஆவணங்​கள் அடிப்​படை​யில் இந்த வழக்​கில் மேல​திக விசா​ரணை செய்ய மார்ச் 13-ல் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, புதுக் கோட்டை ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலை​மையி​லான போலீ​ஸார், நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட புதிய ஆவணங்​களு​டன் சேர்த்​து, அனைத்து ஆவணங்​களை​யும் விசா​ரணை செய்து வரு​கின்​றனர். இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யும் விசா​ரித்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீ​ஸார் தரப்​பில் கேட்​ட​போது, “நீ​தி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் விசா​ரணை தீவிர​மாக நடைபெற்று வரு​கிறது. விசா​ரணை முடிந்து அதுதொடர்​பான அறிக்கை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​படும். இதற்கு நீதி​மன்​றம் காலக்​கெடு எது​வும் நிர்​ண​யம் செய்​யாத​தால், விசா​ரணை முழு​மை​யாக முடிந்​தவுடன் அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும்" என்​றனர்.

சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
“நேற்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், ஆனால் இன்று…” - பாக்யராஜ் மறைவு குறித்து சிரஞ்சீவி வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in