அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
Updated on
1 min read

சென்னை: பாமக​வின் பெயர், கொடி, சின்​னத்தை பயன்​படுத்த அன்​புமணிக்கு தடை விதிக்​கக் கோரி​யும், பாமக-​வின் தலை​வ​ராக தன்னை அங்​கீகரிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக் கோரி​யும் சென்னை உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் ராம​தாஸ் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை நிராகரிக்​கக் கோரி அன்​புமணி தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசா​ரணைக்கு வரவுள்​ளது. இந்​நிலை​யில், ராம​தாஸ் தொடர்ந்​துள்ள வழக்​கில் பாமக​வின் பொதுச் செய​லா​ள​ரான தன்​னை​யும் எதிர்​மனு​தா​ர​ராக இணைக்​கக் கோரி வடிவேல் ராவணன் தாக்​கல் செய்த மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றம் விசா​ரணைக்கு ஏற்க மறுப்பு தெரி​வித்​தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வடிவேல் ராவணன் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அதில், பாமக​வின் பொதுச் செய​லா​ள​ரான தன்னை இந்த வழக்​கில் சேர்க்​காமல் உரிமை​யியல் நீதி​மன்​றம் விசா​ரணை மேற்​கொள்​வது என்​பது சரி​யான நடை​முறை அல்ல. எனவே, உரிமை​யியல் நீதிமன்​றத்​தில் நடை​பெறும் வழக்கு விசா​ரணைக்கு தடை விதிக்க வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்வி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் கே.​பாலு ஆஜராகி வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி, பாமக பெயர், கொடி, சி்ன்​னம் தொடர்​பாக உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வரும் வழக்கு விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​தும், இந்த மனுவுக்கு ராம​தாஸ் உள்​ளிட்​டோர் பதிலளிக்க உத்​தர​விட்​டும் விசா​ரணையை ஏப்​.10-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார்.

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மார்ச் 17-ல் என்டிஏ ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in