2-ம் கட்ட நிலையங்களுடன் இணைப்பு: தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ அழைப்பு

2-ம் கட்ட நிலையங்களுடன் இணைப்பு: தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ அழைப்பு
Updated on: 
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்​டத் திட்ட வழித்​தடங்களில் அமைந்​துள்ள நிலை​யங்​களு​டன், அரு​கிலுள்ள தனியார் நிறு​வனங்​கள் மற்​றும் கல்வி, மருத்​துவ வளாகங்​களை நேரடி​யாக இணைக்​கும் புதிய திட்​டத்​துக்​குச் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதற்​கான விருப்​பமுள்ள நிறு​வனங்​களுக்​குச் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் அழைப்பு விடுத்​துள்​ளது.

சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 128 நிலை​யங்​களு​டன் அமைக்​கப்​படு​கிறது. இத்திட்டம் 3 வழித்​தடங்​களில் (மாதவரம் – சிறுசேரி சிப்​காட், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி, மாதவரம் – சோழிங்​கநல்​லூர்) செயல்​படுத்​தப்​படு​கிறது. இந்த 3 வழித்​தடங்​களில் இடம்​பெறும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் இருந்து அரு​கில் உள்ள பெருநிறுவன அலு​வல​கங்​கள், பல்​நோக்​குப் பயன்​பாட்டு வளாகங்​கள், மருத்​து​வ​மனைகள் மற்​றும் கல்​லூரி​களுக்கு நேரடி இணைப்பு வசதியை ஏற்​படுத்​தும் புதிய முயற்​சிக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இம்​முயற்​சி​யின் கீழ், மெட்ரோ ரயில் நிலை​யங்​களை​யும் அவற்றை ஒட்​டியுள்ள தனியார் நிறு​வனங்​களின் வளாகங்களையும் இணைக்​கும் வகை​யில், பிரத்​யேக நடைமேம்​பாலங்​கள் மற்​றும் உயர்​மட்ட நடைபாதைகள் அமைக்​கத் திட்டமிடப்​பட்​டுள்​ளது. பயணிகள், பணி​யாளர்​கள், மாணவர்​கள் மற்​றும் நோயாளி​கள் மெட்ரோ நிலை​யத்​தில் இருந்து தடையின்றி எளிதாகத் தங்​கள் இடங்​களுக்​குச் சென்று வரும் வகை​யில் முதல் மற்​றும் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்து​வதே இதன் நோக்​கமாகும். இந்த இணைப்​புப் பாலங்களை அமைப்​ப​தற்​கான முழு மூலதனச் செல​வையும் சம்பந்​தப்​பட்ட தனியார் நிறு​வனமே ஏற்க வேண்​டும்.

கட்டி முடிக்​கப்​பட்ட பிறகு, அதன் தூய்​மைப் பராமரிப்பு, பாதுகாப்பு மற்​றும் பயன்​பாட்டு வசதி​களைச் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் மேற்​கொள்​ளும். பொது​வாக மெட்ரோ நிலையத்தின் கட்​ட​ணம் செலுத்​தாத பகுதிக்கு மட்​டுமே இணைப்பு வழங்​கப்​படும். கட்​ட​ணம் செலுத்​தும் பகுதிக்கு இணைப்பு தேவைப்​பட்​டால், அதற்​கான கூடுதல் செல​வையும் தனியார் நிறு​வனமே ஏற்க வேண்​டும்.

தொழில்​நுட்ப சாத்​தி​யக்​கூறுகள் மற்​றும் அதி​காரி​களின் ஒப்புதலுக்கு உட்​பட்டு விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்​கப்​படும். இதற்கான விரிவான விருப்ப வெளிப்​பாட்டு ஆவணம் விரைவில் வெளி​யிடப்​படும். இத்​தகவலை மெட்ரோ ரயில் நிறு​வன அதிகாரிகள் வெளி​யிட்​டுள்​ளனர்.

2-ம் கட்ட நிலையங்களுடன் இணைப்பு: தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ அழைப்பு
டிசம்பர் 6 முதல் 14 வரை பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

X