டிசம்பர் 6 முதல் 14 வரை பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

பத்மாவதி தாயார் கோயில்

பத்மாவதி தாயார் கோயில்

Updated on: 
1 min read

திருப்பதி: ஒவ்​வொரு ஆண்டும் கார்த்​திகை மாதம் திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவ விழா வெகு சிறப்​பாக நடை​பெறு​வது வழக்​கம்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் டிசம்​பர் 6-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. அன்​றிரவு சின்ன சேஷ வாக​னத்​தில் தாயார் மாட வீதி​களில் உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிக்க உள்​ளார்.

டிசம்​பர் 11-ம் தேதி காலை சர்வ பூபாள வாக​னமும், மாலை தங்க தேரோட்​டமும், இரவு கருட வாகன சேவையும் நடை​பெறுகிறது. 7-ம் நாளான டிசம்​பர் 12-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்​திர பிரபை, 8-ம் நாளான டிசம்​பர் 13-ம் தேதி காலை தேர்த்​திரு​விழாவும், அன்​றிரவு அஸ்வ வாகன சேவையும் நடத்​தப்​பட உள்​ளது.

இதனை தொடர்ந்து நிறைவு நாளான டிசம்​பர் 14-ம் தேதி காலை கோயில் வளாகத்​தில் உள்ள பத்ம குளத்​தில் பஞ்​சமி தீர்த்​தவாரி நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. அன்று மாலை பிரம்​மோற்​சவ கொடி இறக்க நிகழ்ச்​சி​யுடன் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை பிரம்​மோற்​சவ விழா நிறைவடைகிறது.

இந்த பிரம்​மோற்​சவத்​தை​யொட்டி, கோயி​லில் மராமத்து பணிகள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்றன. பிரம்​மோற்​சவ விழா​வினையொட்டி டிசம்​பர் 1-ம் தேதி மற்​றும் 5 ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம், குங்​குமார்ச்​சனை உட்​பட அனைத்து ஆர்​ஜித சேவை​களும் ரத்து செய்​யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>பத்மாவதி தாயார் கோயில்</p></div>
ஆஸி. அணியில் லயன் நீக்கம்

X