ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க அறிவுறுத்தல்

ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: ரயில்வே பாது​காப்பு விதி​களின்​படி, ரயில் பெட்​டிகள், நடைமேடைகள், காத்​திருப்பு அறை​கள், சுரங்​கப் பாதைகள், நடை மேம்​பாலங்​கள் அல்​லது ரயில் நிலைய வளாகத்​தின் எந்த பகு​தி​யிலும் கற்பூரம், மெழுகு​வர்த்​தி, விளக்​கு​கள் ஆகிய​வற்றை ஏற்​று​வது தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

மீறு​ வோர் மீது ரயில்வே சட்​டத்​தின் படி, நடவடிக்கை எடுக்​கப்​படும். அந்த வகை​யில், ரயில் மூலம் சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் ரயில்​களுக்​குள் அல்​லது ரயில் நிலைய வளாகத்​துக்​குள் கற்பூரம் ஏற்​று​வதைத் தவிர்க்க வேண்​டும்.

ஒரு சிறிய தீப்​பொறிக்​கூட அபாயகர​மான சூழ்​நிலைக்கு வழி​வகுக்​கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்​கும். இது குறித்​து, ஐயப்​ப பக்​தர்​களிடம் விழிப்​புணர்வு பிர​சா​ரங்​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் பிரச்சினை: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in