கத்திப்பாரா அருகே ராட்சத கிரேன்கள் உதவியுடன் மெட்ரோ உயர்மட்டப் பாதையில் கான்கிரீட் பாலம் பொருத்தும் பணி நிறைவு

கத்திப்பாரா அருகே ராட்சத கிரேன்கள் உதவியுடன் மெட்ரோ உயர்மட்டப் பாதையில் கான்கிரீட் பாலம் பொருத்தும் பணி நிறைவு
Updated on: 
1 min read

சென்​னை​: சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின் மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரையி​லான 5-வது வழித்​தடத்​தில் கோயம்​பேடு மார்க்​கெட் முதல் ஆலந்​தூர் வரையி​லான சுமார் 14.5 கி.மீ. நீள உயர்​மட்​டப் பாதையில் பட் ரோடு - கத்​திப்​பாரா இடையே பால் வெல்ஸ் சாலையில் 606-வது மற்​றும் கடைசி யு-கர்​டர் வெற்​றிகர​மாகப் பொருத்​தப்​பட்​டது.

தலா 550 டன் திறன் கொண்ட இரண்டு பிரம்​மாண்ட ஹைட்​ராலிக் கிரேன்​கள் மூலம் இப்​பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. 15 மீட்​டர் முதல் 33.33 மீட்​டர் வரை நீளமும், சராசரியாக 135 டன் எடையும் கொண்ட மொத்​தம் 606 யு-கர்​டர்​கள் இந்த 9.5 கி.மீ. பாதையில் நிறு​வப்​பட்​டுள்​ளன.

பொறி​யியல் சவால்​கள்

கடுமையான போக்​கு​வரத்து நெரிசல், இடப்​பற்​றாக்​குறை, பூமிக்கு அடி​யிலும் மேலேயும் செல்​லும் பயன்​பாட்​டுக் குழாய்​கள் மற்​றும் மவுன்ட்- பூந்​தமல்லி சாலை​யின் ஒருங்​கிணைந்த மேம்​பாலம் எனப் பல்​வேறு சவால்​களைத் தாண்டி இப்​பணிகள் முடிக்​கப்​பட்​டுள்​ளன.

பி 399 - பி 400 ஆகிய தூண்​களுக்கு இடையே கிரேன்​களை நிறுத்த போதிய இட​வசதி இல்​லாததால், ஒரு கிரேன் அரு​கிலுள்ள தேவாலய வளாகத்​துக்​குள்​ளும், மற்​றொரு கிரேன் குறுகிய தெரு​விலும் நிறுத்​தப்​பட்​டது.

பொறி​யாளர்​கள் வாக்கி-டாக்​கி​கள் மூலம் துல்​லிய​மாகத் தகவல் பரிமாறி இப்​பணியை வெற்​றிகர​மாக முடித்​தனர். பால்​வெல்ஸ் சாலை​யில் (பி380 – பி381 தூண்​கள்) அரு​கிலுள்ள பள்ளி மற்​றும் குடி​யிருப்​பு​களால் ஏற்​பட்ட இடநெருக்​கடியைச் சமாளிக்க, பள்​ளி​யின் சுற்​றுச்​சுவர் தற்​காலிக​மாக அகற்​றப்​பட்டு, விஜயதசமி விடு​முறை நாட்​களில் மட்​டும் பணிகள் நடை​பெற்​றன.

சிறப்பு கிரேன்

வழக்​க​மான 550 டன் கிரேன்​களால் தேவை​யான தூரத்தை எட்ட முடி​யாததால், 1,000 டன் திறன் கொண்ட சிறப்பு கிரேன் வரவழைக்​கப்​பட்டு கர்​டர் பொருத்​தப்​பட்​டது. பள்ளி திறப்​ப​தற்கு முன்​பாகச் சுற்​றுச்​சுவர் மீண்​டும் முழு​மையாகச் சீரமைக்​கப்​பட்​டது.

மைல்​கல் சாதனை

துல்​லிய​மான திட்​ட​மிடல், போக்​கு​வரத்து மேலாண்மை மற்​றும் தொடர்​புடைய அனைத்​துத் தரப்​பினரின் ஒத்​துழைப்​புடன், அதிக நெரிசல் மிகுந்த நகர்ப்​புறச் சூழலில் இந்​தச் சிக்​கலான கட்​டு​மான மைல்​கல் சாதனையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எட்டியுள்ளது.

கத்திப்பாரா அருகே ராட்சத கிரேன்கள் உதவியுடன் மெட்ரோ உயர்மட்டப் பாதையில் கான்கிரீட் பாலம் பொருத்தும் பணி நிறைவு
‘உள்ளாட்சித் தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்’ - அண்ணாமலை கருத்து

X