இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க உத்தரவிடக்கோரி மனு

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க  உத்தரவிடக்கோரி மனு
Updated on
1 min read

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்​பான விசா​ரணையை பேரவை தேர்தல் அறி​விப்​புக்கு முன்​பாக விசா​ரித்து முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தி்ல் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதி​முக உட்​கட்சி விவ​காரம் மற்​றும் இரட்டை இலை சின்​னத்தை முடக்​கு​வது தொடர்​பாக திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த சூரியமூர்த்​தி, வழக்​கறிஞர் ராம்​கு​மார் ஆதித்​தன், பெங்​களூரு புகழேந்​தி, கோவை சுரேன் பழனி​சாமி உள்​ளிட்​டோர் ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களைத் தொடர்ந்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, தேர்​தல் ஆணை​யத்​தில் அளிக்​கப்​பட்​டுள்ள புகார்​கள் மீதான முதல்​கட்ட விசா​ரணையை விரை​வாக நடத்தி முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு கால​வரம்பு நிர்​ண​யம் செய்​யக்​கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தரப்​பிலும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

பதி​லுக்கு தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் பிஹார் தேர்​தல் காரண​மாக வேளைப்​பளு இருப்​ப​தால், அதி​முக உள்​கட்சி பிரச்​சினை மற்​றும் இரட்டை இலை சின்னம் தொடர்​பான விசா​ரணை தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​துக்கு கால வரம்பு நிர்​ண​யம் செய்​யக்​கூ​டாது என்​றும், இயற்கை நீதி​யின் அடிப்​படை​யில் மனு​தா​ரர்​களுக்கு போதிய காலஅவ​காசம் வழங்​கப்பட வேண்​டும் என்​றும், முதல்​கட்ட விசா​ரணை நடத்தி அதன்​பிறகே ஒரு முடிவுக்கு வர முடி​யும் என்​றும் கடந்த ஜூலை மாதம் தெரி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில், இரட்டை இலை சின்னம் தொடர்​பான விசா​ரணையை தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் அறி​விப்​புக்கு முன்​பாக நடத்தி முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக்​கோரி, திண்​டுக்​கல் சூரியமூர்த்தி தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதில், கடந்த 9 மாதங்​களுக்​கும் மேலாக இந்த விசா​ரணை​யி்ல் எந்த முன்​னேற்​ற​மும் இல்​லாமல் உள்​ளது. தேர்​தல் அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு விட்​டால் வழக்கு விசா​ரணை நீர்த்​துப்​போய் விடும் என்​ப​தால் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் அறி​விப்​புக்கு முன்​பாக இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யுள்​ளார்​. இந்​த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க  உத்தரவிடக்கோரி மனு
​காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை மாடியிலிருந்து தள்ளி கொல்ல முயன்ற இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in