​காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை மாடியிலிருந்து தள்ளி கொல்ல முயன்ற இளைஞர் கைது

ஆபத்தான நிலையில் மாணவிக்கு தொடர் சிகிச்சை
​காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை  மாடியிலிருந்து தள்ளி கொல்ல முயன்ற இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: காதலிக்க மறுத்த கல்​லூரி மாணவியை, மாடியி​லிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். ஒருதலைக் காதலால் நிகழ்ந்த இந்த விபரீதம் தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்னை நெற்​குன்​றம் பகு​தியை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒரு​வர் ஆவடி​யில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் பி‌காம் 2-ம் ஆண்டு படித்து வரு​கின்​றார். கடந்த 3 மாதங்​களாக இளைஞர் ஒரு​வர் மாணவியை பின் தொடர்ந்து காதலித்​துள்​ளார். ஆனால் மாணவியோ அந்த காதலை ஏற்​றுக்​கொள்​ளாமல் ஒதுங்​கிச் சென்​றுள்​ளார்.

இருப்​பினும் இளைஞர் தின​மும் மாணவி கல்​லூரிக்கு செல்​லும்​போதும், கல்​லூரி முடிந்து வீடு திரும்​பும்​போதும் பின் தொடர்ந்து காதலிக்​கும்​படி கட்​டாயப்​படுத்தி தொல்லை கொடுத்​துள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக மாணவி தனது தந்​தை​யிடம் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து தந்​தை, சம்​பந்​தப்​பட்ட இளைஞரை கண்​டித்​துள்​ளார்.

ஆனாலும், அந்த இளைஞர் கேட்​காமல் தொடர்ந்த மாணவியை பின் தொடர்ந்​துள்​ளார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு மாணவி வீட்டு மொட்டை மாடி​யில் காய வைத்​திருந்​திருந்த துணி​களை எடுக்க சென்​றுள்​ளார். மாண​வி​யின் வீட்​டருகே நின்று அவரை நோட்​ட​மிட்ட இளைஞர், உடனே பக்​கத்து வீட்​டின் வழி​யாக மாணவி வீட்​டின் மாடிக்கு தாவி குதித்​துள்​ளார்.

பின்​னர் மாணவியிடம் தன்னை காதலிக்​கு​மாறு கேட்டு தகராறில் ஈடு​பட்​டுள்​ளார். மாணவி மறுத்​த​தால் ஆத்​திரமடைந்த இளைஞர் மாண​வியை மாடியி​லிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்​றுள்​ளார். மாடியி​லிருந்து கீழே விழுந்​த​தில் மாண​வி​யின் இடுப்பு எலும்​பில் முறிவு ஏற்​பட்டு கதறி​னார்.

அவரது அலறல் சத்​தம் கேட்டு குடும்​பத்​தினர், அக்​கம் பக்​கத்​தினர் சேர்ந்து மாணவியை மீட்டு போரூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு ஆபத்​தான நிலை​யில் அவர் சிகிச்சை பெற்று வரு​கிறார். முன்​ன​தாக, மாண​வியை கீழே தள்​ளி​விட்டு தப்ப முயன்ற இளைஞரை அக்​கம் பக்​கத்​தினர் பிடித்து கோயம்​பேடு காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

போலீ​ஸாரின் விசா​ரணை​யில் பிடிபட்ட இளைஞர் அரியலூர், மேலத் தெரு​வைச் சேர்ந்த சிலம்​பரசன் (27) என்​பதும், இவர் கடந்த 5 ஆண்​டு​களுக்கு முன்​பு, மாண​வி​யின் எதிர் வீட்​டில் தங்​கி​யிருந்து கோயம்​பேடு காய்​கறிச் சந்​தை​யில் வேலை செய்து வந்​ததும், தற்​போது மாணவி வேறு இடத்​துக்கு இடம் பெயர்ந்​ததை அறிந்து அங்கு சென்​று, மது​போதை​யில் இது​போன்ற செயலில் ஈடு​பட்​டுள்​ளதும் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். தற்​போது அவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்​. தொடர்ந்​து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

​காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை  மாடியிலிருந்து தள்ளி கொல்ல முயன்ற இளைஞர் கைது
பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க சென்னையில் இரவு முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in