கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சாலை பராமரிப்பில் குறைபாடு: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் முக்கிய உத்தரவு
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சாலை பராமரிப்பில் குறைபாடு: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்​கச்​ச​ாவடி சாலை பராமரிப்பு குறை​பாடு தொடர்​பான புகாரில் ஒப்​பந்த நிறு​வனத்​துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்​தவர் சுரேஷ்​பாபு, சுங்​கச்​சாவடி எல்​லைக்​குட்பட்ட சாலைகள் மோசமாக இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படுவ​தாக​வும் இதுதொடர்​பாக தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் பெறப்​பட்ட விவரங்​களையும் மேற்​கோள்​காட்டி, மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதையடுத்​து, மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வர் ராஜா தலை​மையி​லான அமர்வு விசா​ரணை நடத்​தி​யது. பின்னர் பிறப்பித்த உத்தரவில் புகார்​தா​ரருக்கு ரூ.1 லட்​சம் இழப்​பீடும், ரூ.15 ஆயிரம் வழக்​குச் செல​வும் வழங்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.

மேலும், 5 ஆண்டுகளில் சுங்​கச்​சாவடி​யில் ரூ.919.91 கோடி வரு​வாய் வசூலிக்​கப்​பட்​ட​போ​தி​லும், சாலையை பராமரிக்​க​வில்லை. எனவே வாகன ஓட்​டிகள் சந்​திக்​கும் மனஉளைச்​சலைக் கருத்​தில் கொண்​டு, பராமரிப்பு ஒப்​பந்த நிறு​வனத்​துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ஆணை​யம், அந்​தத் தொகையை தமிழ்​நாடு மாநில நுகர்​வோர் ஆணை​யத்​தின் சட்ட உதவி நிதி​யத்​துக்​குச் செலுத்​த​வும் உத்​தர​விட்​டது.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சாலை பராமரிப்பில் குறைபாடு: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
“ஈரானை நரகத்துக்கு அனுப்புவேன்” - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in