தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி சென்னையில் ‘இண்டியா’ கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி சென்னையில் ‘இண்டியா’ கூட்டணி  இன்று ஆர்ப்பாட்டம்
Updated on: 
1 min read

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலைவர் மாணிக்​கம் தாகூர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறியிருப்பதாவது​: பாஜக ஆட்​சி​யில் நடைபெற்று வரும் தேர்​தல் ஜனநாயகப் படு​கொலையை கண்​டித்​தும், தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி நீக்​கத்தை வலி​யுறுத்​தி​யும், இண்​டியா கூட்​டணி சார்​பில் 'ஜன​நாயகம் காப்​போம்' என்ற தலைப்​பில் மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்​டம் இன்று காலை 10 மணி​யள​வில் சென்னை எழும்​பூர், லாங்ஸ் தோட்ட சாலை, ரமடா சர்க்​கிள் அரு​கில் எனது தலை​மை​யில் நடை​பெற உள்​ளது.

இதில் அமைச்​சர் ராஜ்மோகன், விசிக தலை​வர் திரு​மாவளவன், மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ, ஐயூஎம்​எல் தலை​வர் காதர் மொய்​தீன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செய​லா​ளர் ஆசைதம்பி ஆகியோர்​ பங்​கேற்​கிறார்​கள்​.

தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி சென்னையில் ‘இண்டியா’ கூட்டணி  இன்று ஆர்ப்பாட்டம்
போதைப்பொருளுக்கு எதிராக 1,810 கி.மீ. பைக் பேரணி: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in