புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்தது: 5 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் காங்கிரஸ்

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்தது: 5 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் காங்கிரஸ்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி தேர்​தலில் காங்​கிரஸூக்கு 16 தொகு​தி​கள், திமுக.வுக்கு 14 தொகு​தி​கள் என்று முடி​வானது. இதில் உள்​ஒதுக்​கீ​டாக இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக​வுக்கு தலா ஒரு தொகு​தியை திமுக வழங்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

ஆனால், திமுக, விசிக, கம்​யூனிஸ்ட்​கள் போட்​டி​யிடும் தொகு​தி​களில் காங்​கிரஸ் சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதையடுத்து திமுக – காங்​கிரஸ் இடையே சமரச பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் எது​வும் நடக்​க​வில்​லை. இந்​நிலை​யில் மனுக்​களை திரும்​பப் பெற காலக் கெடு நேற்று முடிந்​தது.

தற்​போது காலாப்​பட்​டு, ராஜ்பவன், மங்​கலம், திரு​புவனை, காரைக்​கால் தெற்கு ஆகிய 5 தொகு​தி​களில் திமுக- காங்​கிரஸ் கட்​சிகள் நேரடி​யாக மோதுகின்​றன. அதே​போல் உழவர்​கரை, ஊசுடு, நெட்​டப்​பாக்​கம், ஏனாமில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சியை எதிர்த்து காங்​கிரஸ் போட்​டி​யிடு​கிறது.

இதற்கு மத்​தி​யில் தட்​டாஞ்​சாவடி, உழவர்​கரை ஆகிய இரு தொகு​தி​களில் மனு தாக்​கல் செய்​திருந்த இந்​திய கம்​யூனிஸ்ட் தட்​டாஞ்​சாவடி​யில் மட்​டும் வாபஸ் பெற்​றுள்​ளது. உழவர்​கரை​யில் போட்​டி​யிடு​கிறது. இதுபற்றி இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச்​செயலர் சலீம் கூறுகை​யில், "இத்​தேர்​தலில் திமுக, காங்​கிரஸ் கட்​சிகளுக்கு புதுச்​சேரி​யில் எங்​களின் ஆதரவு இல்​லை. விசிக, மார்க்​சிஸ்ட், மதி​முக கட்​சிகள் போட்​டி​யிடும் தொகு​தி​களில் ஆதரவு அளிப்​போம். நல்ல சுயேச்​சைகளுக்​கும் ஆதரவு தரு​வோம். வலு​வான இண்​டியா கூட்​ட​ணியை காங்​கிரஸ் உடைத்து விட்​டது’’ என்​றார்.

இதே போல் கூட்​ட​ணிக் குழப்​பத்​தால், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் லாஸ்​பேட்​டை, திரு​புவனை ஆகிய இரு தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறது.

இதுதொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் புதுச்​சேரி மாநில செய​லா​ளர் ராமசந்​திரன் கூறுகை​யில், “கூட்​ட​ணிக் கட்​சிகளை இணைத்​துச் செல்ல திமுக - காங்​கிரஸ் இரண்​டுமே தவறி விட்​டன. இந்​திய கம்​யூனிஸ்ட் போட்​டி​யிடும் தொகு​தி​யில் ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​வோம். விசிக, மதி​முக, தேமு​திக கட்​சிகளு​டன் இணைந்​து தேர்​தல்​ பணி​யாற்​ற தயா​ராக இருக்​கிறோம்​" என்​று தெரிவித்​தார்​.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்தது: 5 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் காங்கிரஸ்
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in