

எஸ்.சேட்டு
திருத்தணி: திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், வீரமங்கலம் பகுதியை சேர்ந்த எஸ்.சேட்டு, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ.25 ஆயிரத்துக்கு மேல் மாத ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் இலவசம் மற்றும் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். 99 நாட்களில் அரசு கஜானா நிரப்பப்படும்.
ரேஷன் கடைகளில் மதுவிற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.