ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Updated on: 
1 min read

ஈரோடு: ஈரோடு திண்​டல் சக்தி நகரைச் சேர்ந்​தவர் சச்​சிதானந்​தம். லாரி உரிமையாளரான இவர், திமுக ஆட்​சிக் காலத்​தில் டாஸ்​மாக் நிர்​வாகத்​துக்கு லாரி​களை வழங்கி வந்​தார். திமுக ஆட்​சிக் காலத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியுடன் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் இடங்​கள் மற்​றும் டாஸ்​மாக் விநியோக ஒப்​பந்த முறைகேடு புகார்​கள் தொடர்​பாக வரு​மான வரித்​துறை மற்​றும் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் பல்​வேறு இடங்​களில் சோதனை நடத்​தினர்.

இதன் ஒரு பகுதி​யாக, மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்​மாக் கிடங்​கு​கள் மற்​றும் கடைகளுக்கு சரக்கு வாக​னங்​கள் மூலம் மதுபாட்​டில்​களை விநியோகம் செய்​யும் ஒப்​பந்​ததா​ரராகச் செயல்​பட்டு வந்த சச்​சிதானந்​தத்​தின் வீடு மற்​றும் அலு​வல​கத்​தில் நேற்று வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். டாஸ்​மாக் முறைகேடு வழக்கு தொடர்​பாக இந்​தச் சோதனை நடை​பெற்று வரு​வ​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். சோதனை​யின் முடி​வில் ஆவணங்​கள் ஏதேனும் கைப்​பற்​றப்​பட்​டனவா என்​பது குறித்து தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கைசிக ஏகாதசி: திருப்பதி கோயில் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர பகுமான மரியாதை

X