

திருச்சி: திருச்சி கல்வி நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கல்வி நிறுவனத்துக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் 2 கார்களில் வந்த அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜசேகரன் நேற்று காலை தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், மாலையில் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.