விமான நிலையங்களில் சூட்கேஸ்களை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு: வண்ண ரிப்பன் கட்ட பயணிகளுக்கு அறிவுறுத்தல்

விமான நிலையங்களில் சூட்கேஸ்களை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு: வண்ண ரிப்பன் கட்ட பயணிகளுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​வி​மான நிலை​யங்​களில் சூட்​கேஸ்​களை மாற்றி எடுத்​துச் செல்​லும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வ​தால், சூட்​கேஸ்​களில் பயணி​கள் வண்ண ரிப்பன் கட்ட விமான நிலைய ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

சென்னை உள்​ளிட்ட நாட்​டின் பல்​வேறு விமான நிலை​யங்​களில், கன்​வேயர் பெல்ட்​களில் வரும் சூட்​கேஸ்​களை பயணி​கள் தவறு​தலாக மாற்றி எடுத்​துச் செல்​லும் சம்​பவங்​கள் தொடர்ச்​சி​யாக அதி​கரித்து வரு​கின்​றன.

ஒரே மாதிரி​யான வடிவம் மற்​றும் நிறங்​களில் சூட்​கேஸ்​கள் அதி​கம் பயன்​படுத்​தப்​படு​வ​தால் இந்த குழப்​பம் ஏற்​படு​வ​தாக கூறப்​படு​கிறது. விமான நிறு​வனங்​கள், ஒவ்​வொரு சூட்​கேஸுக்​கும் அடை​யாள டேக் வழங்​கி, அதற்​கான எண்ணை பயணி​களின் போர்​டிங் பாஸிலும் ஒட்​டு​கின்​றன.

இருந்​தா​லும், நீண்ட பயண களைப்பு மற்​றும் அவசரம் காரண​மாக பலர் டேக் எண்​களை சரி​பார்க்​காமல் உடைமை​களை எடுத்​துச் செல்​கின்​றனர். இதனால், பயணி​கள் இடையே வாக்​கு​வாதங்​களும் ஏற்​படு​கின்​றன.

இந்த பிரச்​சினைக்கு தீர்​வாக, இந்​திய விமான நிலைய ஆணை​யம், பயணி​கள் தங்​கள் சூட்​கேஸ்​களின் கைப்​பிடி அல்​லது மேற்​பகு​தி​யில் வண்​ணமய​மான ரிப்​பன்​கள், ஸ்டிக்​கர்​கள் அல்​லது தனித்​துவ அடை​யாளங்​களை பொருத்​து​மாறு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதன்​மூலம், கன்​வேயர் பெல்ட்​டில் வரும் உடைமை​களை எளி​தில் அடை​யாளம் காண முடி​யும் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதே​போல், சென்னை விமான நிலை​யத்​தில் கன்​வேயர் பெல்ட்​களை சுற்றி ட்ராலிகளு​டன் கூட்​ட​மாக நிற்​பது என்​பது மற்​றொரு சிக்​கலாக உள்​ளது.

இதனால், சில பயணி​கள் தங்​கள் உடைமை​களை எடுக்க முடி​யாமல், அவை மீண்​டும் பெல்ட்டை சுற்றி வர காத்​திருக்க வேண்​டிய நிலை உரு​வாகிறது.

எனவே, வெளி​நாடு​களில் நடை​முறை​யில் உள்​ளது போல், பயணி​கள் கன்​வேயர் பெல்ட்​டிலிருந்து சிறிது தூரத்​தில் காத்​திருந்​து, தங்​கள் உடைமை​கள் வந்​த​பின் மட்​டும் முன்​னேறி சென்று எடுக்​கும் ஒழுங்​கு​முறையை சென்னை உள்​ளிட்ட வி​மான நிலை​யங்​களில் அமல்​படுத்த வேண்​டும் என பயணி​கள் கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

விமான நிலையங்களில் சூட்கேஸ்களை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு: வண்ண ரிப்பன் கட்ட பயணிகளுக்கு அறிவுறுத்தல்
டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in