அமைச்சர் வன்னியரசு சரணாலயத்தில் புலியை துரத்திய நிகழ்வு: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வழக்கு

அமைச்சர் வன்னியரசு சரணாலயத்தில் புலியை துரத்திய நிகழ்வு: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வழக்கு
Updated on: 
1 min read

சென்னை: அமைச்​சர் வன்னியரசு புலியை துரத்​திய நிகழ்வு தொடர்​பாக நீதி​மன்ற கண்​காணிப்​பின் கீழ் விசா​ரணை நடத்​தக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

நீல​கிரி மாவட்​டம் மசினகுடிக்​குச் சென்ற அமைச்​சர் வன்​னியரசு கடந்த நவ.10 அன்று வாக​னத்​தில் புலியை துரத்​திச்​செல்​வது போன்ற வீடியோக் கள் சமூக வலை​தளத்​தில் வைரலாகின.

இந்தச் சம்​பவம் தொடர்​பாக நீதி​மன்ற கண்​காணிப்​பின்​கீழ் விசா​ரணை நடத்​தக்​கோரி வழக்​கறிஞர் கந்​தன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: சரணாலயத்​தில் புலிகள் உள்​ளிட்ட வனவிலங்​கு​களுக்கு எந்த தொந்​தரவும் கொடுக்​கக் கூடாது என உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளது. அமைச்​சர் எந்த அலு​வலும் இல்​லாமல், புலிகள் காப்​பகத்​துக்​குள் சென்று, புலியை விரட்டி வீடியோ எடுத்து அதை பகிரங்​க​மாக பகிர்ந்​துள்​ளார்.

இது வனவிலங்​கு​கள் பாது​காப்பு சட்​டத்​தின்​படி தண்​டனைக்​குரிய குற்​றம். எனவே இந்த விவகாரம் தொடர்​பாக உயர் நீதி​மன்ற கண்​காணிப்​பில் சுதந்​திர​மான விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும்.

இந்த சம்​பவம் தொடர்​பாக புலிகள் காப்​பக கள இயக்​குநர் அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட வேண்​டும். அமைச்​சரின் இத்​தகைய செயலை ஆய்வு செய்து அவர் மீது நட​வடிக்கை எடுக்க உத்​தர​விடவேண்​டும். இவ்​வாறு கோரியுள்​ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அமைச்சர் வன்னியரசு சரணாலயத்தில் புலியை துரத்திய நிகழ்வு: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வழக்கு
காவிரி விவசாயிகள் கருத்துகளை கேட்க திமுக சார்பில் குழு அமைப்பு

X