நவ.30-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நவ.30-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நாளை (நவ.29) வளிமண்​டல மேலடுக்கு சுழற்சி உரு​வாக வாய்ப்பு உள்​ளது. இதன் தாக்​கத்​தால் 30-ம் தேதி வாக்​கில் குறைந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். இது டிச.2-ம் தேதி வாக்​கில் தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​யில் காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக வலுப்​பெறக்​கூடும் என்று இந்​திய வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: லட்​சத்​தீவின் தெற்​குப் பகுதி​களில் இருந்து மத்​தி​யக் கிழக்கு அரபிக்​கடல் வழி​யாக கடலோர கர்​நாடகா வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று, நீல​கிரி, கோவை, தென்​காசி, தூத்​துக்​குடி, கன்​னியாகுமரி மாவட்​டங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும்.

திருப்​பூர், கடலூர், திருச்சி, அரியலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், புதுக்​கோட்டை, ராம​நாத​புரம், திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை, புறநகர் பகுதி​களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

நவ.30-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 மாதங்களில் 4,400 பள்ளிகளுக்கு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

X