“நான்கு முனை போட்டியால் இழுபறி நிலை வரலாம்!” - ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் கணிப்பு | நேர்காணல்

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

Updated on
2 min read

தேர்​தலுக்​காக, இந்​திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) 234 தொகு​தி​களுக்​கும் பொறுப்​பாளர்​களை நியமித்து தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்தி வரு​கிறது.

இது​வரை சட்​டப்​பேர​வைக்​குள் அடி​யெடுத்து வைக்​காத ஐஜேகே, இம்​முறை அதைச் சாத்​தி​யப் படுத்​தும் நோக்​கில் வியூ​கங்​களை வகுத்து வரும் நிலை​யில், கட்​சி​யின் நிறு​வனர் தா.இ​ரா.​பாரி​வேந்​தரிடம் ‘ஜன​நாயகத் திரு​விழா’வுக்​காகப் பேசினோம்.

Q

15 ஆண்​டு​கள் கடந்த பிறகும் ஒரு சில மாவட்​டங்​களைத் தாண்டி ஐஜேகே அவ்​வள​வாக வளர்ச்சி பெற​வில்​லை​யே..?

A

ஒவ்​வொரு கட்​சித் தலை​வ​ரும் தக்​களுக்​கான பாணி​யில் கட்​சியை நடத்​தி, வளர்த்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள். அந்த வகை​யில், நாங்​கள் எங்​களுக்​கான ஒரு பாதையை அமைத்​துக்​கொண்டு கட்​சியை நடத்​துகின்​றோம்.

Q

கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் பெரம்​பலூரில் போட்​டி​யிட்ட நீங்​கள் பேர​வைத் தேர்​தலில் எங்கே போட்​டி​யிடப் போகிறீர்​கள்?

A

சட்​டபேர​வைத் தேர்​தலில் கட்​சி​யின் தலை​வர் ரவி பச்​ச​முத்​து​வும் மற்​றும் தகு​தி​யுள்ள பிற பொறுப்​பாளர்​களும் போட்​டி​யிடு​வார்​கள்.

Q

என்​டிஏ கூட்​ட​ணி​யில் நீடிக்​கும் நீங்​கள் இம்​முறை எத்​தனை தொகு​தி​களைப் பெற உத்​தேசித்​துள்​ளீர்​கள்?

A

ஏழு தொகு​தி​களைக் கேட்​கி​றோம். மூன்று முறை மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்டு ஒரு முறை வென்​றுள்ள எங்​களுக்கு 6 அல்​லது 7 தொகு​தி​களை ஒதுக்​கு​வது தான் நியாய​மாக இருக்​கும்.

Q

தேர்​தலில் எதை முன்​வைத்து பிரச்​சா​ரம் செய்ய உள்​ளீர்​கள்?

A

நீட் தேர்வு ரத்​து, கல்விக் கடன் ரத்​து, நகைக் கடன் ரத்து என்​றெல்​லாம் கூறி ஆட்​சிக்கு வந்​தவர்​கள் இன்​று​வரை எதை​யும் செய்​ய​வில்​லை. தேர்​தல் வாக்​குறு​தி​களில் 15 சதவீதம் மட்​டுமே செய்​திருப்​ப​தாக மக்​கள் பேசுகி​றார்​கள். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்​சம் கோடியை நெருங்​கு​கிறது. இதற்கு வட்டி கட்​டி, அரசு ஊழியர்​களுக்கு சம்​பளம் கொடுத்​து, ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு சம்​பளம் கொடுத்த பிறகு கையில் இருப்பு எது​வும் இல்​லை. இந்த நிலை​யில், தேர்​தல் நேரத்​தில் இலவசங்​கள் குறித்த அறி​விப்​பு​களை வெளி​யிடு​வது எதற்​காக என்​பதை மக்​கள் புரிந்​து​கொள்​வார்​கள்.

Q

என்​டிஏ கூட்​ட​ணி​யில் பாஜக, அதி​முக, தமாகா தவிர மற்ற கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை ஏதும் நடக்​க​வில்​லை​யே..?

A

வெளி​யில் தெரி​யாமல் இருக்​கலாம். மற்ற கட்​சிகளு​ட​னும் நல்ல புரிதல் இருக்​கிறது. எனவே, என்​டிஏ கூட்​டணி உறு​தி​யாக வெற்​றி​பெறும்.

Q

விஜய் கட்சி இந்​தத் தேர்​தலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​து​மோ?

A

அரிய வாய்ப்பை தம்பி விஜய் இழக்​கி​றாரோ என்ற ஐயம் எனக்கு உள்​ளது. ஒரு​முறை வாய்ப்​பைத் தவற​விட்​டால் இந்​தப் போட்டி மீண்​டும் கிடைப்​பது அரிது. விஜய் புரிந்​து​கொள்​வார் என எண்​ணுகிறேன்.

Q

திமுக-வை​யும் பாஜக-வை​யும் ஒருசேர எதிர்க்​கும் விஜய் இம்​முறை ஆட்சி அதி​காரத்தை பிடிப்​பா​ரா?

A

கற்​பனை​யாகத் தோன்​றுகிறது. விஜய் தனது சிறந்த குணங்​களாலும், அடக்​க​மான பழக்​கவழக்​கத்​தா​லும் மக்​களால் போற்​றப்​படு​பவர். ஆனால், அரசி​யலில் அனுசரித்​துப் போவதே வெற்​றிக்கு வழி​வகுக்​கும்.

Q

திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில், தங்​களை இந்​துகளுக்கு எதி​ரான​வர்​களாக பாஜக கட்​டமைக்​கப் பார்ப்​ப​தாக திமுக குற்​றஞ்​சாட்​டு​கிறதே?

A

அவர​வரின் தெய்​வத்தை வழிபட அவர​வ​ருக்கு உரிமை உண்​டு. சிக்​கந்​தர் தர்​கா​வில் வழிபட எந்த இந்​துக்​களும் எதிர்ப்பு தெரிவிக்​க​வில்​லை. அதேசம​யம், தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வதற்​கும் இஸ்​லாமியர்​கள் யாரும் எதிர்ப்​புத் தெரிவிக்​க​வில்​லை. இந்​துக்​கள் மலை​மேல் அமைந்​திருக்​கும் தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வ​தில் மற்ற சமயத்​தினருக்கு என்ன பிரச்​சினை? இத்​தனை ஆண்​டு​களாக ஏற்​ற​வில்லை என்​ப​தால், தற்​போது அதை ஏற்​றக்​கூ​டாது என்று யாரும் சொல்​ல​முடி​யாது.

Q

தேர்​தலில் நான்கு முனை போட்டி உரு​வா​னால் களம் யாருக்​குச் சாதக​மாக இருக்​கும் என கணிக்​கிறீர்​கள்?

A

நான்கு முனை போட்டி என்​றால் அறு​திப் பெரும்​பான்மை கிடைக்​காமல் இழுபறி​யாகக்​கூட வரு​வதற்கு வாய்ப்​புள்​ளது.

Q

எஸ்​ஐஆர் பற்றி உங்​கள் கருத்​து?

A

எஸ்​ஐஆர் மிக மிக அவசி​ய​மான ஒன்​று. உண்​மை​யான வாக்​காளர் பட்​டியலை கொண்​டு​வ​ரு​வ​தால் யாருக்​கும் எந்​தப் பாதக​மும் ஏற்​ப​டாது. அதற்கு மாறாக, பொய்​யான வாக்​காளர்​களைக் கொண்டு போலி​யான வாக்​கு​களை பதிவு செய்​வதை தடுக்க இது ஒரு நல்ல வாய்ப்​பாக அமை​யும்.

Q

தேசிய கல்விக் கொள்​கையை (NEP) ஏற்​காத​தால், சமக்ரா சிக் ஷா அபி​யான் (SSA) உள்​ளிட்ட திட்​டங்​களுக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​திருப்​ப​தாக சொல்​வதை ஒரு கல்​வி​யாள​ராக எப்​படி பார்க்​கிறீர்​கள்?

A

மத்​திய அரசு ஒரு திட்​டத்​தைக் கொண்​டு​வ​ரும்​போது, அதை அனைத்து மாநிலங்​களும் பின்​பற்ற வேண்​டும். அப்​படி பின்​பற்​றி​னால் தான் நல்​லது. பின்​பற்​றா​விட்​டால் மாநில அரசுக்​கும் மக்​களுக்​குமே அது இழப்​பு.

Q

தேர்​தல் வாக்​குறு​தி​களை திமுக முழு​மை​யாக நிறை​வேற்​ற​வில்லை என்ற குற்​றச்​சாட்டு குறித்​து..?

A

இலவசங்​களை அறி​வித்​து, மக்​களை சோம்​பேறிகளாக்கி உழைப்​பைத் தவிர்க்​கும் எந்த மாநில​மாக இருந்​தா​லும் அவர்​கள் மக்​களை தவறாக வழிநடத்​துகி​றார்​கள் என்றே பொருள்.

Q

உயர்த்​தப்​பட்ட சொத்​து​வரி, மின் கட்​ட​ணம், பால் கட்​ட​ணம் - இவை எல்​லாம் தேர்​தலில் தாக்​கத்தை ஏற்​படுத்​து​மா?

A

உறு​தி​யாக ஏற்​படுத்​தும். இதை​விட​வும், அனைத்து அரசு அலு​வல​கங் களி​லும் லஞ்​சம் தலை​விரித்​தாடு​வ​தாக மக்​கள் பெரிய அளவில் பேசிக்​கொள்​கி​றார்​கள். அது​வும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.

Q

அதி​முக-​விடம் தொகு​திப் பட்​டியல் ஏதும் தந்​திருக்​கிறீர்​களா... அது குறித்து தகவல் எது​வும் வெளி​யாக​வில்​லை​யே..?

A

எங்​களுக்கு என்​டிஏ-வுடன் நல்ல புரிதல் இருக்​கிறது. ஆகவே, ஐஜேகே திருப்தி அடை​யும் வகையி​லான தொகு​தி​களை எங்​கள் தோழமைக் கட்​சிகள் கொடுப்​பார்​கள் என்று உறுதி​யாக நம்​புகிறோம்.

<div class="paragraphs"><p>பாரிவேந்தர்</p></div>
‘மாப்பிள்ளை சாரை’ சந்தித்த மைனாரிட்டி கட்சி | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in