பல்லாவரத்தில் ஐஜேகே வேட்பாளர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு

பல்லாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே வேட்பாளர் வெங்கடேசன், உடன் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சந்திரசேகர் ராஜா உள்ளிட்டோர்.

பல்லாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே வேட்பாளர் வெங்கடேசன், உடன் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சந்திரசேகர் ராஜா உள்ளிட்டோர்.

Updated on
1 min read

தாம்பரம்: பல்​லா​வரம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தேசிய ஜனநாயக கூட்​டணி ஐஜேகே வேட்​பாளர் டி. வெங்​கடேசன் நேற்று பல்​லா​வரம் பேருந்து நிலை​யம் அருகே உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்பு பகு​தி​யில் வீடு வீடாக சென்று அதி​முக அரசின் சாதனை​கள் பற்றி எடுத்​துக் கூறி​யும், அதி​முக தலை​மை​யில் ஆட்சி அமைந்த உடன் தொகு​தி​யில் உள்ள ஒவ்​வொரு வீட்​டுக்​கும் ரூ.10 ஆயிரம் பெற்று தரு​வேன் என வாக்கு சேகரித்​தார்.

அதி​முக பொது செய​லா​ளர் பழனி​சாமி நல்​லாட்சி தரு​வதோடு, பெண்​களுக்​கான பாது​காப்பு நடவடிக்​கைகளுக்கு முக்​கி​யத்​து​வம் தரு​வார். பெண்​கள் அச்​சமின்றி வெளி​யில் நடமாடலாம். கொலை, கொள்ளை சம்​பவங்​கள் தடுக்​கப்​படும்.

கஞ்சா போதை இல்​லாத மாநில​மாக உரு​வாக்​கப்​படும். மீண்​டும் அதி​முக ஆட்சி அமைய இரட்டை இலை சின்​னத்​திற்கு வாக்​களித்து வெற்றி பெற வைக்​கு​மாறு கேட்டு கொண்​டார்.

அப்​போது, முன்​னாள் எம்​எல்ஏ ப. தன்​சிங், பல்​லா​வரம் பகுதி கழகச் செய​லா​ளர் ஜெய்​பிர​காஷ், கீழ்​கட்​டளை பகுதி கழகச் செய​லா​ளர் சந்​திரசேகர் ராஜா மற்​றும் ஏராள​மான நிர்​வாகி​கள் உடன் இருந்தனர்​.

<div class="paragraphs"><p>பல்லாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே வேட்பாளர் வெங்கடேசன், உடன் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சந்திரசேகர் ராஜா உள்ளிட்டோர்.</p></div>
மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in