மின்வாரிய ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

மின்வாரிய ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
Updated on
1 min read

சென்னை: மின்​வாரிய ஊழியர்​கள் கண்​டிப்​பாக அடை​யாள அட்டை அணிய வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மின்​வாரி​யம் பிறப்​பித்த உத்​தரவு விவரம்:

தமிழ்​நாடு மின்​வாரி​யம், மின் உற்​பத்தி கழகம், பகிர்​மானக் கழகம், மின் தொடரமைப்​புக் கழகம், பசுமை எரிசக்​திக் கழகம் ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்​களும் அலு​வலக வளாகத்​துக்​குள் நுழை​யும்​போதும், பணி நேரத்​தி​லும் அடை​யாள அட்​டையை வெளி​யில் தெரி​யும்​படி கண்​டிப்​பாக அணிந்​திருக்க வேண்​டும். பாது​காப்பு பணி​யாளர்​கள், அதி​காரி​கள் சோதனை​யிடும்​போது தயக்​கமின்றி அடை​யாள அட்​டையைக் காண்​பிக்க வேண்​டும்.

ஊழியர்​கள் இதை முறை​யாகப் பின்​பற்​று​வதை சம்​பந்​தப்​பட்ட தலை​மைப் பொறி​யாளர்​கள், மேற்​பார்​வைப் பொறி​யாளர்​கள் உறுதி செய்ய வேண்​டும். அலு​வல​கப் பாது​காப்பு மற்​றும் வெளி நபர்​களை எளி​தாகக் கண்​டறி​யும் நோக்​கில் இந்த பழைய உத்​தரவு தற்​போது மீண்​டும் தீவிர​மாக வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோக திமுக அரசே காரணம்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in