‘ஜான் பாண்டியனுக்கு சாந்தியை அறிமுகப்படுத்தினேன்’ - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் தகவல்

‘ஜான் பாண்டியனுக்கு சாந்தியை அறிமுகப்படுத்தினேன்’ - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் தகவல்
Updated on: 
1 min read

சென்னை: “வீரமணி விவ​காரத்​தில் ஜான்பாண்டியனுக்கு சாந்தியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்” என தமிழக காங்​கிரஸ் எஸ்சி அணி மாநில தலை​வர் ரஞ்​சன்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சிறுமி பாதிக்​கப்​பட்ட விவரம் தெரிந்​தவுடன் நான் காவல்​துறை உயர் அதி​காரி​யிடம் புகார் அளித்​தேன். ஆனால் அந்த அதி​காரி, ‘இது மிக​வும் உணர்​வுப்​பூர்​வ​மான விஷ​யம், இதை வெளியே கொண்டு வந்​தால் ஆதா​ரங்​களை உறு​திப்​படுத்த முடி​யாது.

அதனால் வெளி​யில் பேச வேண்​டாம்’ என்று கூறிய​தால், காவல்​துறை​யின் விசா​ரணைக்கு முழு​மை​யாக ஒத்​துழைப்பு அளித்​தேன். 2024 நவம்​பர் முதல் பிப்​ர​வரி வரை தொடர்ந்து அதி​காரி​களைச் சந்​தித்து ஆதா​ரங்​களை​யும் வாட்​ஸ்​அப் உரை​யாடல்​களை​யும் வழங்​கினேன். இது ஒரு மொட்​டைப் பெட்​டிஷன் அல்ல. இந்​திய அளவி​லான ஒரு கட்​சி​யின் லெட்​டர் பேடில் முறைப்​படி அளிக்​கப்​பட்ட புகார்.

ஆனால், ‘பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் நேரடி​யாக வந்​தால் மட்​டுமே நடவடிக்கை எடுக்க முடி​யும்’ என்று கூறி அவர்​கள் தேடிக்​கொண்டே இருந்​தார்​கள். முன்​னாள் சட்​டத்​துறை அமைச்​சர் ரகுப​தி, 2025-இல் புகார் வந்த மறு​நாளே எஃப்​.ஐ.ஆர் பதிவு செய்​யப்​பட்​ட​தாகக் கூறுகிறார். 2024-லேயே கமிஷனர் மற்​றும் கூடு​தல் கமிஷனரிடம் நான் அளித்த ஆதா​ரங்​கள் மற்​றும் புகார்​கள் பற்றி அவர் எது​வும் பேச​வில்​லை. அனாமதேய​மாக பென்​டிரைவ் வந்​த​தாகக் கூறு​வது ஏனென்று தெரிய​வில்​லை.

ஜான் பாண்​டியனுக்​கு, சாந்​தியை அறி​முகப்​படுத்​தி​யது நான் தான். ஆனால், பணம் வாங்​கு​வதற்​காக நான் அவரைச் சந்​திக்க வைக்​க​வில்​லை. சாந்​திக்​கும், ஜான் பாண்​டியனுக்​கும் இடையே நடந்த உரை​யாடல்​களை நேரில் பார்த்​த​போது​தான் இந்த விவ​காரத்​தின் பின்​னணி​யில் உள்ள உண்​மை​கள் எனக்​குத் தெரிய​வந்​தன.

அதன்​பிறகு​தான் இதிலிருந்து வில​கினேன். இந்த வழக்​கில் ஜான் பாண்​டியன் தவறு செய்​திருந்​தா​லும் அல்​லது ரஞ்​சன் குமா​ராகிய நான் தவறு செய்​திருந்​தா​லும், நீதி​மன்​றம் யா​ராக இருந்​தா​லும்​ தண்​டிக்​கும்​. விரை​வில்​ உண்மை வெளிவரும்​. காவல்​துறை விசாரணைக்கு அழைத்தால் தயாராக இருக்கிறேன். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

‘ஜான் பாண்டியனுக்கு சாந்தியை அறிமுகப்படுத்தினேன்’ - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் தகவல்
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் சாந்தி, அவரது கணவரை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in