

மேட்டூர் அணை
மேட்டூர்: மேட்டூர் அணையில் நீரியல் மற்றும் இயந்திரவியல் நிபுணர் குல்சன் ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் இடது மற்றும் வலது கரைகள், ஆய்வு சுரங்கம்,கவர்னர் பாயின்ட், நீர்மட்ட அளவீட்டுக் கருவிகள், தானியங்கிஅளவீட்டுக் கருவிகள், மேல் மற்றும் கீழ்மட்ட மதகு பகுதிகள்,நில அதிர்வு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைஅவர் ஆய்வு செய்தார்.
மேலும், அணையின் கட்டுமானம், நீர்வெளியேற்ற அமைப்புகள், அணைப் பாதுகாப்பு அம்சங்கள், கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவற்றின் தரவுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, படகு மூலம் சென்று மதகுகளைப் பார்வையிட்டார். ‘இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் அணையை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.