4,292 கோயில்களின் தணிக்கை விவரத்தை இணையத்தில் மக்கள் பார்வையிடலாம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்

4,292 கோயில்களின் தணிக்கை விவரத்தை இணையத்தில் மக்கள் பார்வையிடலாம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘தமிழகம் முழு​வதும் உள்ள 4,292 கோயில்​களின் வரவு - செலவு கணக்​கு​களின் தணிக்கை விவரங்​களை பொது​மக்​கள் இணை​யத்​தில் பார்​வை​யிடலாம்’ என உயர் நீதி​மன்​றத்​தில் அறநிலை​யத் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள அனைத்து கோயில்​களின் வரவு - செலவு கணக்கு விவரங்​கள் தொடர்​பான வரு​டாந்​திர தணிக்கை விவரங்​களை வெளிப்​படை​யாக அனை​வரும் தெரிந்​து​கொள்​ளும் வகை​யில், அறநிலை​யத் துறை​யின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய உத்​தர​விடக் கோரி மயி​லாப்​பூரைச் சேர்ந்த ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான டி.ஆர்​.ரமேஷ், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரி்த்த உயர் நீதி​மன்​றம், எத்​தனை கோயில்​களின் கணக்​கு​கள் தணிக்கை செய்​யப்​பட்​டுள்​ளன, எத்​தனை தணிக்கை அறிக்​கைகள் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்ளன என்​பது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அடுத்த வாரம் அறிக்கை அப்​போது, அறநிலை​யத்​துறை தரப்​பில், ‘‘முதற்​கட்​ட​மாக இது​வரை தமிழகம் முழு​வதும் உள்ள 4,292 கோயில்​களின் வரவு - செலவு கணக்​கு​களின் தணிக்கை விவரங்​கள் பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

ரூ.10 ஆயிரத்​துக்கு குறை​வான வரு​மானம் உள்ள கோயில்​களின் கணக்​கு​கள் தணிக்கை செய்​யப்பட மாட்​டாது. மற்ற கோயில்​களின் கணக்கு விவரங்​களின் அறிக்​கைகளை​யும் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்ய நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பாக விரி​வான அறிக்கை அடுத்த வாரம் தாக்​கல் செய்​யப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், வழக்கு வி​சா​ரணையை அடுத்த வாரத்​துக்​கு தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

4,292 கோயில்களின் தணிக்கை விவரத்தை இணையத்தில் மக்கள் பார்வையிடலாம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
தமிழகத்தில் 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in