தமிழகத்தில் எத்தனை பேர் மாயம், மீட்க என்ன நடவடிக்கை? - அறிக்கை அளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் எத்தனை பேர் மாயம், மீட்க என்ன நடவடிக்கை? - அறிக்கை அளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் இது​வரை எத்​தனை பேர் மாய​மாகி​யுள்​ளனர், அவர்​களைக் கண்​டு​பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து டிஜிபி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் திருக்​கோ​விலூரை சேர்ந்த சங்​கர்​ராஜ். கடந்த 2021-ல் மாய​மா​னார். சொத்​துப் பிரச்​சினைக்​காக தந்​தை​யும், சகோதரரும் அவரை சிறைபிடித்து கடத்தி வைத்​துள்​ள​தாக​வும், அவரை மீட்டு ஒப்​படைக்க வேண்​டும் என்​றும் கோரி சங்​கர்​ராஜின் மனைவி புவனேஸ்​வரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​தார்.

நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, பி.​கார்த்​தி​கேயன் அமர்​வில் வி​சா​ரணை நடந்​தது. அப்​போது நடை​பெற்ற வாதம்: புவனேஸ்​வரி தரப்​பு: சங்​கர்​ ராஜை கண்​டு​பிடிக்க போலீஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத​தால், வழக்கை சிபிசிஐடி வி​சா​ரணைக்கு மாற்ற வேண்​டும்.

காவல் துறை தரப்​பு: மாய​மான சங்​கர்​ராஜை கண்​டு​பிடிக்க பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அவரை கண்​டு​பிடித்து தரக் கோரி தந்தை பொன்​னனும் ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த மனுவை வி​சா​ரித்த உயர் நீதி​மன்​றம், திருக்​கோ​விலூர் டிஎஸ்​பி​யின் நேரடி கண்​காணிப்​பில் இந்த வழக்கை வி​சா​ரிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.

இவ்​வாறு வாதம் நடந்​தது. இதையடுத்​து, நீதிப​தி​கள் தமது உத்​தர​வில் கூறிய​தாவது: காணா​மல் போனவர்​களின் நிலை​யைக் கண்​டறிய பல்​வேறு மாநிலங்​களில் ஏஐ தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படு​கிறது.

அது​போன்ற செயலிகள் தமிழக காவல் துறை​யில் பயன்​படுத்​தப்​படு​கிற​தா? இது​போன்ற ஆட்​கொணர்வு வழக்​கு​களில் உயர் நீதி​மன்​றம் எவ்​வளவு​தான் உத்​தரவு பிறப்​பித்​தா​லும் போலீ​ஸார் தீவிர வி​சா​ரணை நடத்​து​வது இல்​லை.

மாய​மான சங்​கர்​ராஜை கண்​டு ​பிடிக்க இது​வரை என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து திருக்​கோ​விலூர் டிஎஸ்பி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்.

அதே​போல, தமிழகம் முழு​வதும் இது​வரை எத்​தனை பேர் மாய​மாகி​யுள்​ளனர்? இதுதொடர்​பாக எத்​தனை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன? அவற்றின் நிலை என்ன? எத்​தனை பேர் கண்​டு​பிடிக்​கப்பட்​டுள்​ளனர்? மாய​மானவர்களை கண்​டு​பிடிக்க தமிழகத்​தி​லும் நவீன தொழில்​நுட்​பங்​கள் பயன்​படுத்​தப்​படு​கிற​தா? நிலு​வை​ வழக்​கு​களின் வி​சா​ரணையை துரிதப்​படுத்த என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து டிஜிபி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டுள்​ளனர்​.

தமிழகத்தில் எத்தனை பேர் மாயம், மீட்க என்ன நடவடிக்கை? - அறிக்கை அளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
நீட் தேர்வு எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள்

X