கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: மருத்துவமனை விளக்கம்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: மருத்துவமனை விளக்கம்
Updated on
1 min read

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு  உடல்நிலை சீராக உள்ளது என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வி.எஸ்.பாபுவின் உடல்நிலையை பல்துறை நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். அவரது மருத்துவ அளவீடுகள், உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வி.எஸ்.பாபு எம்எல்ஏ உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு. அந்த தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த அவருக்கு கடந்த 9-ம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: மருத்துவமனை விளக்கம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், இ.கம்யூ வேட்பாளர்கள் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in