“தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது” - ஓசூர் நடைபயணத்தில் மு.வீரபாண்டியன் கருத்து

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடந்த நடைபயணம்.

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடந்த நடைபயணம்.

Updated on
1 min read

ஓசூர்: தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​தார்.

மேகே​தாட்டு அணை கட்​டும் முயற்​சி​யைக் கண்​டித்து ஓசூரில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மற்​றும் தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் நேற்று நடைபயணம் நடை​பெற்​றது. இதற்கு தளி எம்​எல்ஏ ராமச்​சந்​திரன் தலைமை வகித்​தார். பின்னர் செய்​தி​யாளர்​களிடம் மு.வீர​பாண்​டியன் கூறிய​தாவது: காவிரி நடு​வர் மன்​றத்​தின் 2007-ம் ஆண்டு இறு​தித் தீர்ப்​பை​யும், 2018-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பை​யும் மதிக்​காமல் மேகே​தாட்​டில் அணை கட்ட கர்​நாடக அரசு தன்​னிச்​சை​யாக முயற்​சிப்​பதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம்.

இடது​சா​ரி​கள் ஒருங்​கிணைப்​புக் குழு தேர்​தல் வரும்​போது சூழ்​நிலைக்கு ஏற்ப தனித்தோ அல்​லது கூட்​டாகவோ போட்​டி​யிடு​வது குறித்து முடிவு எடுக்​கப்​படும். அரசி​யல் சூழல் உரு​வா​னால் நாடு முழு​வதும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் தனித்​துப் போட்​டி​யிடும். அத்​தகைய சூழல் ஏற்​பட்​டால் தனித்​துப் போட்​டி​யிட​வும் தயங்க மாட்​டோம்.

குதிரை பேரம் இப்​போது நடந்து கொண்​டிருக்​கிறது. வட இந்​திய மாநிலங்​களில் இருந்து படிப்​படி​யாக தமிழகத்​துக்​கும் பரவி​யுள்​ளது. இது நல்​லதல்ல. எம்​எல்​ஏக்​கள் கட்சி மாறி​னால் அது மக்​களுக்கு செய்​யும் துரோகம். குதிரை பேரத்​தில் யார் ஈடு​பட்​டாலும் நாங்​கள் எதிர்ப்​போம். தமிழக அமைச்​சர​வை​யில் இடம்​பெறும்சூழல் உரு​வாகி வருகிறது. ஓசூர் மண்​ணிலிருந்​தும் அமைச்​சர் உரு​வாக வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு கூறி​னார்​.

<div class="paragraphs"><p>மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடந்த நடைபயணம். </p></div>
“புதிய மொழி கற்பது வீணாகாது” - சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in