

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அரும்பாக்கம் திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன், கரூர் கார்த்திக், சேதுராஜ், ரமேஷ் உள்ளி்ட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, இரு வழக்குகளிலும் இடைக்காலத் தடையை வரும் நவ.23 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.