குன்னூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த ராணுவ வீராங்கனைகளின் குதிரையேற்ற சாகசம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடைபெற்ற குதிரை சாகச நிகழ்வுக்கு முன்னதாக குதிரையுடன் அணிவகுப்பில் பங்கேற்ற ராணுவ பெண் அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடைபெற்ற குதிரை சாகச நிகழ்வுக்கு முன்னதாக குதிரையுடன் அணிவகுப்பில் பங்கேற்ற ராணுவ பெண் அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள்.

Updated on
1 min read

குன்னூர்: குன்​னூரில் நடை​பெற்ற குதிரையேற்ற நிகழ்​வில், பெண் ராணுவ அதி​காரி​கள் மற்​றும் வீராங்​க​னை​களின் சாகசம் பார்​வை​யாளர்​களை வெகுவாகக் கவர்ந்தது.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அரு​கே​யுள்ள வெலிங்​டனில் ராணுவ பயிற்சி கல்​லூரி செயல்​பட்டு வரு​கிறது. இக்​கல்​லூரி​யில் தரைப்​படை, விமானப்​படை, கடற்​படை ஆகிய முப்​படை அதி​காரி​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு வருகிறது.

இந்​தி​யா​வின் நட்பு நாடு​களின் முப்​படை அதி​காரி​களுக்​கும் இங்கு பயிற்சி அளிக்​கப்​படுவது வழக்கமாகும். இந்​நிலை​யில், ராணுவ பயிற்சி கல்​லூரி மற்​றும் மவுண்​டன் ஜிம்​கானா சார்​பில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் குதிரை சாகச நிகழ்ச்சி குன்​னூரில் நேற்று நடை​பெற்​றது.

ராணுவ பெண் அதி​காரி​கள், வீராங்​க​னை​கள் இந்த சாகச நிகழ்​வில் கலந்து கொண்​டனர். 40-க்​கும் மேற்​பட்ட வீராங்​க​னை​கள் பங்​கேற்​று, குதிரை​யுடன் உயரம் தாண்​டு​தல், குதிரை ஓட்​டப் பந்​த​யம் உள்பட பல்​வேறு போட்​டிகளில் தங்​களது திறமை​களை வெளிப்​படுத்​தினர்.

மேலும், குழந்​தைகளுக்கு மாறு​வேடப் போட்டியும் நடை​பெற்​றது. இதில் நெப்​போலியன், ஜான்சி ராணி மற்​றும் கவ்​பாய் உட்பட பல்​வேறு மாறு வேட உடைகள் அணிந்​தும் போனி குதிரை​யில் அமர்ந்தும் குழந்​தைகள் அணிவகுப்​பில் கலந்து கொண்​டனர்.

இந்த நிகழ்வும் பார்​வை​யாளர்​களை கவர்ந்​தது.நிறைவாக வெற்றி பெற்ற வீராங்கனை​களுக்கு வெலிங்​டன் ராணுவ பயிற்சிக் கல்​லூரி அதி​காரி​யின் மனைவி உமா தே​வி பதக்​கங்​களை வழங்​கி கவுர​வித்​தார்​. இதில் ஏராளமானோர் பஙகேற்றனர்.

<div class="paragraphs"><p>நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடைபெற்ற குதிரை சாகச நிகழ்வுக்கு முன்னதாக குதிரையுடன் அணிவகுப்பில் பங்கேற்ற ராணுவ பெண் அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள்.</p></div>
நேபாளத்தில் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in