ஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்

ஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்
Updated on: 
1 min read

சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறுபான்மை ஓட்டுக்காக, அரசு மற்றும் பொது சொத்துகளை ஆக்கிரமித்த வர்களிடமே ஒப்படைப்பது அரசியலமைப்பு சட்ட நெறி முறைகளை மீறுவதாகும்.

அரசு நிலங்களை வேறு யாரேனும் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே தற்போது ஆக் கிரமிப்பாளர்களுக்கு துணை போகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசு நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சட்டரீதியிலான அதிகாரம் வழங்கப்பட வில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்கவும், கட்டிடங்களை இடித்து தள்ளவும் பல வழக்குகளில் நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களுக்கான‌ பிரச்சினைகளில், நீதிமன்ற தீர்ப்பின் சாராம் சங்களை அறியாமல் தவெக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்க நிலங்கள், நத்தம் புறம்போக்குகள் மற்றும் நீரோடைப் பகுதிகளில் இந்து கோயில்கள் அமைந்திருந்தால் அதை உடனே இடித்து தள்ளும் அரசு, மசூதி, தேவாலயங்களுக்கு மட்டும் அரசாங்க நிலத்தை வழங்குவது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

வாக்கு வங்கி அரசியலுக்கும் ஓர் எல்லை உண்டு. எனவே, உரிய ஆவணங்கள் இன்றி, அரசு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கும் உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்
சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு

X