“திருப்பரங்குன்றம் வழக்கில் நீதி வென்றது” - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இந்து முன்னணி வரவேற்பு

 காடேஸ்வரா சி சுப்பிரமணியம்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்றுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், “நீதி வென்றது. இந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று முருக பக்தர்கள் மிகுந்த எதிர்பார்திருந்த மகிழ்ச்சியான செய்தியை உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்துள்ளது. இது முருகனின் அருளால், இந்து வழக்கறிஞர்களின் முயற்சியால் கிடைத்துள்ள நீதி.

கடந்த 35 ஆண்டுகளாக இந்து முன்னணி நடத்திய போராட்டத்தின், மாநிலத் தலைவராக இருந்த பலிதானி அட்வகேட் ராஜகோபாலன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற நீண்டநெடிய போராட்டங்கள் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பத்தாண்டுகளாக மக்களின் ஆதரவோடு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வழக்குகளை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சந்தித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சட்ட போராட்டத்தின் வாயிலாக தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியும் அதனை மதிக்காமல் அவமதித்தது கடந்த திமுக அரசு. இதனால் விரக்திடைந்த மதுரையைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்ற இளைஞர் தன்னையே கார்த்திகை ஜோதியாக்கி தீக்குளித்த தியாகச் செயல் யாராலும் மறக்க முடியாத மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2025-ஆம் ஆண்டு மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் ஐந்து லட்சம் பக்தர்கள் வீர சபதம் எடுத்தது தமிழகத்தின் பக்தியின் சாதனை. இதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உலகம் முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான முருக பக்தர்கள் குடும்பங்கள் கந்தர் சஷ்டி கவசம் மனமுருக பாடியது உலக சாதனை.

தொடர்ச்சியாக மாதம் தோறும் கிரிவலம் சென்று பிரார்த்தனை செய்தது என பல இவ்வளவு தியாகங்களுக்கும் நீண்ட நெடிய போராட்டம், சட்ட போராட்டம், முருக பக்தர்களின் பிரார்த்தனை என எல்லாமும் இன்று இந்த அருமையான தீர்ப்பை தந்துள்ளது.

இத்தருணத்தில் வீரத்துறவி இராம கோபாலன், ஐயா தாணுலிங்கநாடார், அட்வகேட் ராஜகோபாலன் மற்றும் பூர்ண சந்திரன் ஆகியோர் ஆத்மா கண்டிப்பாக தமிழகத்தின் இந்துக்களை ஆசிர்வதிக்கும். நம்மை பொறுத்தவரை எல்லாம் இறைவனின் செயல். அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

எனவே, இந்த மகத்தான வெற்றியை முருகனுக்கு அர்ப்பணம் செய்கிறோம். நீதி வென்றது. இந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. நூற்றாண்டு தீப ஜோதியை கண்டு தரிசிக்க வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி திருப்பரங்குன்றம் வந்து முருகனின் அருளைப் பெறுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> காடேஸ்வரா சி சுப்பிரமணியம் </p></div>
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி

X